விஜய் நடிப்பில் மெர்சல் படம் இந்த தீபாவளி சரவெடியாக வரவுள்ளது. இப்படத்தை பார்க்க லட்சக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இப்படத்தின் கதை – ’சென்னையில் மருத்துவராக இருக்கும் விஜய் ஒரு ஆய்வு கூட்டத்தில் கலந்துக்கொள்ள அமெரிக்கா செல்கின்றார்.

அந்த கூட்டத்தில் தன்னை போலவே இருக்கும் மேஜிக் செய்யும் விஜய்யை சந்திக்கின்றார், அவரை பின் தொடர்ந்து மருத்துவர் விஜய் செல்ல, இருவரும் சகோதரர்கள் என்று தெரிய வருகின்றது.

பிறகு ப்ளாஷ்பேக்கில் பஞ்சாயத்து தலைவராக இருக்கும் விஜய்க்கு இரட்டை குழந்தை பிறக்க, அதில் ஒரு குழந்தையை ராஜஸ்தானில் இருக்கும் ஒருவருக்கு கொடுக்கின்றார்.

ஒரு குழந்தையை இவர்கள் வளர்க்க, அப்போது எஸ்.ஜே.சூர்யா அந்த ஊர் கிராம மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஒரு சில வேலைகளை செய்ய, இதை அப்பா விஜய் எதிர்க்கின்றார்.

இதனால், அப்பா விஜய்யை எஸ்.ஜே.சூர்யா கொல்ல, அதை தொடர்ந்து கோவை சரளா ஒரு விஜய்யை தூக்கி சென்று சென்னையில் வளர்க்கின்றார், இந்த உண்மைகளை எல்லாம் தெரிந்துக்கொண்டு இரண்டு விஜய்யும் ஆடும் ருத்ரதாண்டவமே மீதிக்கதை’ என ஒரு கதை உலா வர, இது உண்மையா என்பது யாருக்கும் தெரியவில்லை.

ஆனால் UK சென்சாரின் அடிப்படையில்  இப்படத்தின் கதை சுருக்கம் – இரண்டு விஜயும் சேர்ந்து இந்தியாவில் இருக்கும் மருத்துவ துரையின் ஊழலை ஒழிப்பதே இப்படத்தின் மையக்கரு.

22405650_1471122339589752_6391755088877215693_n

Comments

comments