ytB5ifjUhjfahjfdah

ரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘2.0’ படத்தின் இசை வெளியீட்டு விழா, துபாயில் உள்ள புர்ஜ் பார்க்கில் வருகிற 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் லைவ்வாக இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார். அத்துடன், பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

இந்த விழாவில் கலந்துகொள்ள விஜபி கட்டணம் எவ்வளவு தெரியுமா? 6 பேர் கொண்ட மேஜைக்கு இந்திய மதிப்பில் 3,71,625 ரூபாயும், 8 பேர் கொண்ட மேஜைக்கு 4,69,179 ரூபாயும், 12 பேர் கொண்ட மேஜைக்கு 6,81,637 ரூபாயும் கட்டணமாகச் செலுத்த வேண்டும். மாலை 5 மணி முதல் இரவு 11.30 வரை நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் தகவலாக, 2.0 படத்தில் எந்திரனாக வரும் சிட்டிக்கு பறக்கும் சக்தியை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஷங்கர். எந்திரன் முதல் பாடத்திலும் சிட்டி பறப்பது போல காட்சிகளை பார்த்திருப்பீர்கள். ஆனால், எல்லையில் ஏதேனும் இரும்பு பொருள் இருந்தால் மட்டுமே காந்த சக்தியை பயன்படுத்தி அந்த இரும்பின் மீது வேகமாக சென்று ஒட்டிக்கொள்ளும் தன்மையை சிட்டி பெற்றிருக்கும். ஒரு பறவை போலவோ அல்லது விமானம் போலவோ சிட்டியால் பறக்க முடியாது.

ஆனால்,  2.0 வில் தன்னிச்சையாக பறக்கும் சக்தியை சிட்டி பெறுகிறது. மேலும், படத்தில் உலகிற்கு வரும் பிரச்சனை காகம் அல்லது ஏதேனும் ஒரு பறவையால் தான் இருக்கும் என்றும் அவற்றை சமாளிக்கவே சிட்டிக்கு இந்த பறக்கும் சக்தியை கொடுத்திருகிறார் ஷங்கர் என்று கிசுகிசுகிறார்கள் நெட்டிசன்கள்.

தரையில் இருக்கும் போதே அமர்க்களம் பண்ணும்ச சிட்டி, இனிமேல் வானத்தில் பறந்துகொண்டே அதகளம் பண்ண போவது மட்டும் உறுதி.

Comments

comments