DL2kkKdW4AEJj_W

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘2.0’ படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ரஜினியுடன் அக்ஷய்குமார், எமி ஜாக்சன் முதலானோர் நடிக்கும் 2.0 படத்தின் ஒரு பாடல்காட்சி தவிர அனைத்து காட்சிகளின் படப்பிடிப்பை ஏற்கெனவே முடித்துவிட்டு,போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார் ஷங்கர்.

எடுக்கப்படாமல் இருந்த அந்த ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. இவிபி ஸ்டுடியோவில் போடப்பட்டுள்ள பிரம்மாண்ட ‘செட்’டில் ரஜினியும், எமி ஜாக்சனும் நடித்து வருகிறார்கள்.

இந்த பாடல் காட்சியுடன் ‘2.0’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும், ஆடியோ வெளியீட்டு விழாவை மிகப் பிரம்மாண்டமான முறையில் இம்மாதம் 27-ஆம் தேதி துபாயில் நடைபெறவிருக்கிறது.

இதனை தொடர்ந்து ‘2.0’ டீஸர் வெளியிட்டு விழா அடுத்த மாதம் நவம்பர் 22-ஆம் தேதி ஐதராபாத்தில் நடைபெறவிருக்கிறது. டிரைலர் வெளியீட்டு விழாவை ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கிறது.

Comments

comments