DMBmLRUVAAAmZgK

லைகா புரொக்ஷன்ஸ் தயாரிப்பில், ஷங்கரின் பிரம்மாண்டமான இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் ‘2.0’ படத்தின் இசை வெளியீடு அடுத்த வாரம் 27ம் தேதி துபாயில் உள்ள புர்ஜ் பார்க்கில் நடைபெற உள்ளது. இதற்கான விஐபி லெளன்ஞ்ச் டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா.

6 பேர் கொண்ட மேஜக்கு, 20990 திர்ஹாம், 8 பேர் கொண்ட மேஜைக்கு 26500 திர்ஹாம், 12 பேர் கொண்ட மேஜைக்கு 38500 திர்ஹாம். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில், முறையே 3,71,625 மற்றும் 4,69,179 மற்றும் 6,81,637 ரூபாய் மட்டுமே. நிற்பதற்கும், உட்காருவதற்குமான நன்கொடை டிக்கெட்டுகள் முழுவதும் அளிக்கப்பட்டுவிட்டன. மாலை 5 மணி முதல் இரவு 11.30 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும் என்று டிக்கெட் விற்கும் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

படம்தான் மிகப் பெரும் செலவு செய்து எடுக்கிறார்கள் என்று பார்த்தால், இசை வெளியீட்டு நிகழ்வையும் பெரும் செலவு செய்துதான் பார்க்க வேண்டும் போலிருக்கிறது. படம் தியேட்டருக்கு வந்தால் டிக்கெட் கட்டணங்கள் அப்படியே இருக்குமா அல்லது மேலும் உயருமா என்று தெரியவில்லை.

Comments

comments