647_080417022603

தான் இசையமைக்கும் படங்களைப் பற்றி எப்போதும் அதிகம் பேசாதவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். அவரது இசையில் வெளிவந்துள்ள ‘மெர்சல்’ படத்தின் இசையைப் பற்றி படத்தின் இசை வெளியான நாளிலிருந்தே பேசி வருகிறார்கள்.

‘ஆளப் போறான் தமிழன்’ பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் எப்படி இசையமைத்தார் என்று பலருக்கும் ஆச்சரியம் தான். அரசியல் கலந்த வார்த்தைகளுடன் இடம் பெற்ற அந்தப் பாடல் விஜய்க்கு வேறு ஒரு இமேஜை வழங்கியது. அந்த இமேஜ் இப்போது படத்தின் மூலமும் ஏற்பட்டுள்ளது. படத்தில் தமிழர்களைப் பெருமைப்படுத்தும் காட்சிகளை விஜய் வைத்துள்ளதற்கு அவருடைய ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இருந்தாலும் ‘ஆளப் போறான் தமிழன்’ பாடல், ‘நீதானே…’ பாடல் தவிர வேறு எந்தப் பாடலும் படத்தில் ஒட்டவில்லை என்ற கருத்தும் விமர்சனங்களில் அதிகம் இருக்கிறது. இருந்தாலும் தன்னுடைய ரசிகர்களுக்கு நேற்று தீபாவளி வாழ்த்துகளைச் சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான், ‘மெர்சல்’ படத்தின் வெற்றிக்கும், இசையின் மிகப் பெரிய வெற்றிக்கும் அவருடைய நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

Comments

comments