un6AgTCUmeresal

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு கட்டிடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற நகராட்சி ஆணையர் கணேசன் நகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விஜய், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிப்பில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் மெர்சல். இந்தத் திரைப்படம் தீபாவளி அன்று உலகம் முழுவதும் வெளிவரவுள்ளது. இதற்கான விளம்பரப் போஸ்டர்களும், பேனர்களும் பெரும்பாலான இடங்களில் ஒட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அனுமதியின்றி புதுச்சேரி அரசு அலுவலக கட்டிடங்களிலும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து அண்ணா சிலை அருகில் உள்ள அரசு மருத்துவமனை கட்டிடத்தில் வைக்கப்பட்ட மெர்சல் படத்துக்கான விளம்பர பேனர்களை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர். இதுபற்றி தகவல் அறிந்த விஜய் ரசிகர்கள் ஒன்றுகூடி நகராட்சி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  அதையடுத்து பெரிய பிரச்சனை வெடிக்கும் சூழல் உருவாகும் நிலையில்  பேனர் அகற்றும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

அதன்பின்னர் பாதுகாப்புப்பணியில் இருந்த காவல்துறையினர் ரசிகர்களை அந்தப் பகுதியில் இருந்து பேச்சுவார்த்தையின் மூலம் அனுப்பி வைத்தனர்.

 

Comments

comments