விஜய் நடித்து தீபாவளியன்று வெளியான மெர்சல் படத்திற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

1508392188-3257
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் படம்,  தலைப்பு, கேளிக்கை வரி, விலங்கு நல வாரியம் என தொடர்ச்சியாக பிரச்சனையை  சந்தித்தது.
அந்நிலையில், நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் அட்லீ ஆகிய இருவரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து பேசினர். அதையடுத்து, மெர்சல் படத்திற்கு விலங்கு நல வாரியம் தடையில்லா சான்று வழங்கியது. அதன் பின்னரே நேற்று இப்படம் வெளியானது.
கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கும் இப்படத்திற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
படத்தில் இடம் பெற்ற ஜி.எஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா தொடர்பான காட்சிகளை நீக்க வேண்டும் எனவும், அரசியலுக்கு வருவதற்காக நடிகர் விஜய் தவறான கருத்துகளை பரப்பி வருகிறார் எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Comments

comments