மெர்சல் படத்தில் டைட்டில் கார்டில் இளைய தளபதியில் இருந்து தளபதிக்கு ப்ரோமோட் ஆகியிருக்கிறார் விஜய். தளபதி என்ற டைட்டிலுக்கும், ஆளப்போறான் தமிழன் என்ற பாடலுக்கும் கூட திரைக்கதையில் சின்ன லாஜிக் பிடித்திருக்கிறார் அட்லி.

maxresdefault (3)

ஸ்டைலான தாடி, ஃபிட்டான உடம்பு என படத்துக்காக நிறையவே மாறியிருக்கிறார் விஜய். இதைத்தான் இத்தனை நாளாய் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது.

இப்படி சின்ன சின்ன சர்ப்ரைஸ் தொடரட்டும் விஜய். படம் நெடுக நிறைய கண்ணிகள். “திரைக்கதையின் பிற்பகுதியில் அவை திரும்ப வரும்போது “வாவ்” என்றிருக்கிறது. தனக்காக கட் அவுட் வைக்கப்போகும் சிறுவனிடம் “அதெல்லாம் வேணாம்.

நாலு பேருக்கு அந்தக் காசுல உதவி பண்ணு” என ஒரு வசனம். இதற்க்கு திரையரங்கில் விசில் பட்டைய கிளப்பினார்கள் விஜய் ரசிகர்கள்.ஆட்டம்பாட்டம், ஆக்க்ஷன், அழுகை, மேஜிக் என ஆல் ஏரியாவிலும் கில்லியாடுகிறார். தெறியில் இரண்டு கெட்டப்களில் வந்து மெர்சல் காட்டிய விஜய்க்கு இது இன்னும் ஒரு படி மேல். மதுரை மைந்தனாக தெரியாம வேலியை போட்டாய்ங்க…மெர்சல் படம் மூலம் விஜய் ரசிகர்கள் விருந்து சாப்பிட்டார்கள்.

மெர்சல் படத்தில் சில காட்சிகள் விலங்குகள் நல வாரியத்தால் நீக்கப்ட்டன. கடைசி நேரத்தில் அந்த காட்சிகளை நீக்கினால் தான் தடையில்லா சான்று பெறமுடியும் என்று AWBI கிடுக்கிபிடி போட்டதால் வேறு வழியில்லாமல் காட்சிகளை நீக்கியது படக்குழு.

“பீஸ் ப்ரோ” என்ற வசனத்தில் கூட புறாவுக்கு பதிலாக ஒரு மேஜிக் பந்து சுழல்வது போல காட்சி மாற்றியமைக்கப்பட்டது. மேலும், ராஜ நாகம், வெள்ளை நாகம், ஸ்நேக் மேஜிக் போன்ற சில காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

அந்த காட்சிகள் அனைத்தும் நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும் என கூறுகிறார்கள். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

மெர்சல் படம் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ள நிலையில், நீக்கபட்ட காட்சிகள் எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்பு இப்போதே கிளம்பியுள்ளது.

Comments

comments