g3F9KxBbsdafew

மெர்சல் படம் பார்ப்பதில் விஜய் ரசிகர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேரின் மண்டை உடைக்கப்பட்டது.

மெர்சல் படம் விஜய் ரசிகர்களுக்கு ஒரு திருவிழாவாகவே மாற்றிவிட்டது. விஜய் ரசிகர்கள் இணைந்து பேனர், கட் அவுட் வைத்தல் என தனித்தனி குழுவாக செயல்பட்டு வருகின்றனர்.

இது ஒருபுறமிருக்க தஞ்சை, பேராவூரணியில் மெர்சல் படம் பார்க்க, திரையரங்கு இருக்கையில் அமருவது குறித்து ஏற்பட்ட போட்ட போட்டி மோதலாக மாறி பெரும் கைகலப்பானது. இந்த கைகலப்பு அடிதடியாகி 4 பேரின் மண்டை உடைந்தது. காயமடைந்தவர்கள் ரத்தம் சொட்ட சொட்ட அரங்கை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

ரத்த காயத்துடன் ஓடிவந்த அந்த ரசிகர்களை உடனடியாக மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் சக ரசிகர்கள்.

Comments

comments