மெர்சல் படக் குழுவுக்கு நடிகர் ரஜினிகாந்த் தமது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். சமூகத்தில் நிலவும் முக்கியமான பிரச்சனையை மெர்சல் அலசியுள்ளது எனவும் ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியுள்ளார்.

மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா குறித்து விமர்சிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாரதிய ஜனதா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.ஆனால் பாஜகவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பட நடிகர்கள் என பலரும் பாஜகவுக்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டுள்ளனர்.

அதேநேரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்தார். இதுவும் சர்ச்சையானது.

 FOLLOW

RAJINIKANTH @SUPERSTARRAJINI

IMPORTANT TOPIC ADDRESSED… WELL DONE !!! CONGRATULATIONS TEAM 

10:26 PM – OCT 22, 2017

Twitter Ads info and privacy

 

இந்நிலையில் இன்று தமது ட்விட்டர் பக்கத்தில், மிகவும் முக்கியமான பிரச்சனையை மெர்சல் படம் அலசியுள்ளது; மெர்சல் படக் குழுவுக்கு பாராட்டுகள் என ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Comments

comments