எந்த மாஸ் ஹீரோக்களும் இல்லாமல் அப்போதைக்கு வளர்ந்து வரும் ஹீரோக்களாக இருந்த நடிகர்களை வைத்து ‘சென்னை – 600028′ படத்தை ஹிட்டாக்கியவர் இயக்குநர் வெங்கட் பிரபு. அதே பார்முலாவில் ‘சரோஜா’வும் ஹிட்டாக, வெங்கட்பிரபு பக்கம் மாஸ் ஹீரோக்களின் பார்வை பட்டது. சம்பளமும் எகிறியது.

வெங்கட் பிரபு என்றாலே மிகவும் ஜாலியான மனிதர் என்று தான் எல்லோரும் கூறுவார்கள். ஆனால் இவர் படங்கள் அனைத்தும் ஜாலியாகதான் போகும்.இவர் தற்போது இயக்கி வரும் படம் பார்ட்டி. இப்படத்தில் இவருடைய நண்பர்கள் கேங் தான் நடித்து வருகின்றது.

இவர் படம் ட்ரைலர் வந்தாலே போதும், இது இந்த ஆங்கிலப்படம், அந்த திரைக்கதை கொரியன் படத்தின் காப்பி என்று பலரும் இவரை படத்தை அலசுவார்கள்.

இந்நிலையில் இன்று மெர்சல் படம் பார்த்த பின்பு, மனிதர் ஏடாகூடமாக ஒரு விஷமமான டீவீட்டை தட்டியுள்ளார்.

View image on Twitter

 FOLLOW

VENKAT PRABHU @VP_OFFL

 ALL DA WAY!  A FESTIVAL TREAT!AWESOMELY ADAPTED AND PRESENTED BY ATLEE!! WHATTA PRODUCTION VALUE!!  KU CREDIT?!

3:37 PM – OCT 19, 2017

Twitter Ads info and privacy

 

” படம் முழுக்க தளபதி தான். மெர்சல் பண்டிகைக்கான கொண்டாட்டம். அற்புதமான தழுவலை அழகாக வழங்கியுள்ளார் அட்லீ. என்ன ஒரு ப்ரொடக்ட்ஷன் வால் யூ. பஞ்சு சாருக்கு கிரெடிட்?!”என்று கேள்வி கேட்பதுபோல் அந்த டீவீட்டை முடித்துள்ளார்.

இந்த டீவீட்டை பலரும் ரீ ட்வீட் செய்கின்றனர். சிலர் என்ன ப்ரோ இப்படி சொல்லிடீங்க என்று கேட்கிறார்கள். சிலர் கடுப்பாகி திட்டவும் செய்கின்றனர்.

பஞ்சு சார்: 1989 இல் கமல் மூன்று வேடங்களில், சிங்கீதம் சீனிவாச ராவ், இயக்கத்தில் நடித்த படம் அபூர்வ சகோதரர்கள். இப்படத்தின் கதாசிரியர் பஞ்சு அருணாச்சலம் அவர்கள் ஆவார். இதனை மனதில் கொண்டு தான் வெங்கட் மெர்சல் படத்தை தழுவல் என்றும், அவருக்கு எங்கே உங்கள் நன்றிகள் என்பதைத்தான் இப்படி ஊமை குத்தாக குத்தியிருக்கிறார் வெங்கட்பிரபு.

Comments

comments