ZGTSMSwbvijai (1)

ஸ்பைடர் திரைப்படத்தில் உள்ள சில குறைபாடுகள் குறித்து சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில், சமீபத்தில் வெளியான படம் ஸ்பைடர். இந்த படத்தில் ஹீரோவாக மகேஷ் பாபு நடித்திருந்தார்.

பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்த படம் வசூலில் ஏமாற்றியது.

இதனோடு வெளியான, விஜய் சேதுபதியின் ‘கருப்பன்’, கவுதம் கார்த்திக்கின் ‘ஹர ஹர மகா தேவகி’ வசூலில் ஸ்பைடர் படத்தை பின்னுக்கு தள்ளியது.

ஹீரோ மகேஷ் பாபுவுக்கு கதைக்களம் சரியாக அமைக்கப்படவில்லை என்று இளைஞர்கள் சோசியல் மீடியாக்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஒரு அதிரடி திரில்லர் படத்தில் ஹீரோ மிகவும் சாதாரணமாக வருவதை போன்று முருகதாஸ் கதை அமைத்துள்ளார்.

mahes-babu

இந்த படத்தில் மகேஷ் பாபுவை போலீஸ் ஆபிசர் போன்று காட்டியிருந்தால், படத்தின் ரிசல்ட் வேறுமாதிரி இருந்திருக்கும்.

இந்த படத்தில் வில்லன் வேடத்தை மிக சரியாக முருகதாஸ் அமைத்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா தனது நடிப்பில் மிரட்டி இருக்கிறார் என்று இளைஞர்கள் சோசியல் மீடியாக்களில் பதிவிட்டுள்ளனர்.

ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி என்று பெரும் வெற்றி திரைப்படங்களை கொடுத்த முருகதாஸுக்கு, ஸ்பைடர் திரைப்படம் பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.

Comments

comments