பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் எந்திரன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த, ஐஸ்வர்யா ராய் நடித்த இந்த படம் உலக அளவில் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

 main2

தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகமாக 2.0 படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார்.

இதில் நடிகர் ரஜினிகாந்த், எமி ஜேக்சன், இந்தி நடிகர் அக்ஷய் குமார் ஆகியோர் நடிக்கின்றனர். மிகுந்த பொருட்செலவில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் முடிவடைய உள்ளது.

இந்த நிலையில் இப்படம் குறித்த சுவாரசியமான தகவல் ஒன்றை இந்தி நடிகர் ஆமிர்கான் தெரிவித்துள்ளார். முதன்முதலில் இந்த படத்தில் ரஜினிகாந்த் வேடத்தில் நடிக்க இயக்குநர் ஷங்கர் தன்னை அணுகியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “ஷங்கர் சார் மற்றும் ரஜினிஜி-ன் மிகப்பெரிய ரசிகன் நான். ஷங்கர் 2.0-ல் நடிக்க என்னை அணுகினார். இது ஒரு பிளாக்பஸ்டர் படமாக அமையும்.

அனைத்து சாதனைகளையும் இது முறியடிக்க உள்ளது. ரஜினி சார் கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு முதலில் அழைப்பு வந்தது.

ரஜினி சார் உடல் நலம் சரியில்லாமல் இருந்ததால், இந்த படத்தின் கதையை என்னிடம் கூற ஷங்கரிடம் சொல்லியுள்ளார். உண்மையில், ரஜினி சார் போனில் என்னை அழைத்து இந்த படத்தில் நடிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இந்த படத்தின் கதை மிக அருமையாக உள்ளது. எப்போதெல்லாம் இந்த படத்தினை பற்றி நினைக்கிறேனோ, அப்போது எல்லாம் ரஜினி சார் தான் நினைவுக்கு வருவார். என்னை அந்த கதாபாத்திரத்தில் வைத்து என்னால் பார்க்க முடியவில்லை.

ஷங்கரிடமும் இதனை நான் கூறிவிட்டேன். ரஜினி சாரால் மட்டுமே இதனை செய்ய முடியும் என தெரிவித்தேன். ஏற்கனவே இப்படத்தின் முதல் பாகத்தை நான் பார்த்திருக்கிறேன்.

அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ரஜினி சாரின் மிகப்பெரிய ரசிகன் நான். முதல் பாகத்தில் கிடைத்த தாக்கம் தான், தற்போது வரை வேறு யாரையும் ரஜினி சார் இடத்தில் வைத்து பார்க்க முடியவில்லை. அதனால் தான் நான் இதனை செய்யவில்லை.

இந்த முடிவை எடுக்க எனக்கு அவ்வளவு கடினமாக இல்லை ஏனென்றால் அனைத்து மொழிகளிலும் இந்த படம் சூப்பர் ஹிட்டாகும் என எனக்கு தெரியும்” என்றார்.

Comments

comments