kutty-thala1.jpg.image.784.410

சென்னை: தன் மனைவி, மகள், மகனுக்காக வீட்டில் ஏகப்பட்ட மாற்றங்கள் செய்துள்ளார் நடிகர் அஜித். அதிலும் குறிப்பாக மகனுக்கு.

அஜித் இதுநாள் வரை சென்னை திருவான்மியூரில் தான் வசித்து வந்தார். மகன் பிறந்த பிறகு அவனுக்காக தன் வீட்டில் சில மாற்றங்கள் செய்தார்.

அதற்காக அஜித் வாடகை வீட்டில் தான் இருந்தார், தற்போது அந்த வீடு கலக்கலாக தயாராகிவிட்டதாம். மீண்டும் சொந்த வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த வீட்டில் வீட்டு கதவு முதல் கிச்சன் வரை எல்லாவற்றையும் ரிமோட் மூலம் இயங்கும் வகையில் மாற்றியுள்ளாராம்.

தன் மகளுக்காக பரதநாட்டியம் பயில தனி இடம், ஷாலினி பேட்மிட்டன் விளையாட தனி கோர்ட் என வீட்டிற்குள் பல வசதிகளை செய்து கொடுத்துள்ளாராம். தல… தலய்யா… என்று அவரது ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.

Comments

comments