fyv1NLzGmaxresdefault

கரகாட்டக்காரன் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த கனகாவின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?

புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால் பைத்தியம் பிடித்துவிட்டது என்று அடுக்கடுக்கான வதந்திகளுக்கு சமீபத்தில் முற்றுப்புள்ளி வைத்தார் அவர்.

கனகா பிரபல நடிகை தேவிகாவின் மகள் ஆவார். தனது அசத்தலான நடிப்பின் மூலம் அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார்.

அம்மா இருந்தவரை எந்தவொரு கவலையும் இல்லாமல் இருந்தார். இவரது அப்பா சிறுவதிலேயே இவரைவிட்டுச் சென்றுவிட்டதால் இவரை மிகவும் செல்லமாக வளர்த்துள்ளார் இவரது அம்மா.

அம்மாவின் இழப்பு, அப்பாவின் தொல்லையால் மிகவும் தனிமையில் இருந்தார். இதனால் இவர் பைத்தியம் என்றும், புற்றுநோய் என்றும் சமீபத்தில் இவர் இறந்துவிட்டார் என்றும் தகவல் வெளியாகியது.

தன்னை பைத்தியம் என்ற தந்தையினை பத்திரிகையாளர் முன்பு நேருக்கு நேர் கேள்வி கேட்டார். இவர்களது வழக்கு நீதிமன்றத்தில் இருந்தாலும் தற்போதும் இவர் தனிமையிலே இருந்து வருகிறார்.

40 வயதாகும் இவர் திருமணம் ஆகாமல், தனது தனிமையை தவிர்க்க செல்லப்பிராணிகளை வளர்த்து வருகிறார். இந்த செல்லப்பிராணிகள் சில மனிதர்கள் போன்று இல்லை. மிகவும் நன்றியுணர்வோடே இருக்கின்றன என்கிறார்.

Comments

comments