CxqErZnM647_072217102511

பிக்பாஸ் வீட்டில் இருந்து மக்களால் வெளியேற்றப்படாதவர்களில் ஒருவர் ஓவியா.

ஓவியா மட்டும் கடைசி வரை இருந்திருந்தால் அவர் தான் வெற்றியாளர் என்பதில் சந்தேகம் இல்லை.

மன அழுத்தம் காரணமாக பிக்பாஸ் போட்டியில் இருந்தது வெளியேறிய ஓவியா ஒரு வாரம் கழித்து மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல விரும்பினார்.

அதற்கான பேச்சு வார்த்தையும் நல்லபடியாகத்தான் நடந்தது. ஆனால் ஓவியாவின் தந்தைதான் அவரை பிக்பாஸ் வீட்டுக்கு போக வேண்டாம் என அன்பு கட்டளை விடுத்துள்ளார்.

ஓவியாவின் முடிவுகளில் எப்போதும் தலையிடாதவர் அவர் தந்தை. இதனால் ஓவியா தனது தந்தை சொன்னதை வார்த்தையை தட்டமுடியாத காரணத்தால் ஓவியா மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு போகாமல் முடிவை மாற்றி கொண்டுள்ளார்.

இவ்வாறு ஓவியா பேட்டி ஒன்றின் போது தெரிவித்துள்ளார்.

Comments

comments