கூடவே இருப்பவர்களைக் கழட்டி விட்டுவிட்டு இன்னொருவருடன் கூட்டணி போடும் விஷயம் என்பது அரசியலிலும், சினிமாவிலும் சகஜமான விஷயமாகி விட்டது.

அதனால்தான், சினிமாவில் இருந்தே தங்களை ஆள்பவர்களை மக்கள் தேடுகிறார்கள் போலும். சினிமாவில் இருந்து அரசியலில் குதிக்கப் போகும் கமல்ஹாசனும் இதற்கு விதிவிலக்கல்ல.

indian2-1-e1507465042880

Indian

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் 1996ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘இந்தியன்’. மனிஷா கொய்ராலா, ஊர்மிளா, சுகன்யா, கஸ்தூரி, கவுண்டமணி, செந்தில் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.

எழுத்தாளர் சுஜாதா, இந்தப் படத்துக்கு வசனம் எழுதியிருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். அப்போதே 8 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இந்தப் படம், 30 கோடி ரூபாயை வசூலித்துக் கொடுத்தது.

இந்தப் படத்தின்போது ஏற்பட்ட மனஸ்தாபத்தால், அதன்பிறகு கமல் – ஷங்கர் இருவரும் இணைந்து பணியாற்றவில்லை. எல்லாவற்றையும் மறந்து 21 வருடங்களுக்குப் பிறகு இந்தக் கூட்டணி இணைகிறது.

indian2

Indian 2

அதாவது, ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. இந்தத் தகவலை, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் ஃபைனலில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இந்தப் படத்தை, ஹைதராபாத்தைச் சேர்ந்த தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிப்பதாக அறிவித்தனர். ‘பிக் பாஸ்’ மேடையிலும் அவரை அறிமுகப்படுத்தினர். ஏகப்பட்ட தெலுங்குப் படங்களைத் தயாரித்துள்ள தில் ராஜு, சிறந்த தயாரிப்பாளருக்கான கோல்டன் லோட்டஸ் தேசிய விருது பெற்றவர்.

ஷங்கர் ‘2.0’ படத்திலும், கமல்ஹாசன் ‘விஸ்வரூபம் 2’ மற்றும் ‘சபாஷ் நாயுடு’ படங்களிலும் பிஸியாக இருப்பதால், ‘இந்தியன் 2’ அடுத்த வருடம்தான் தொடங்க இருக்கிறது. இந்தப் படத்துக்கு, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். ஷங்கர் இயக்கிய ‘அந்நியன்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர் இவர்.

இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜுவைக் கழட்டி விட்டுவிட்டு, லைகா நிறுவனத்துடன் கைகோர்த்திருக்கிறார்கள் கமல்ஹாசனும், ஷங்கரும். விஜய் நடித்த ‘கத்தி’ மற்றும் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘2.0’ படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

Comments

comments