b271WgOCiop

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டி நேற்று நடந்தது. இறுதி நாளில் போட்டியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். ரசிகர்கள் எதிர்பார்த்த ஓவியாவும் கலந்து கொண்டார். அதே போல பரணியும் கலந்து கொண்டார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் அனைவரும் சென்றபோது ஒருவருக்கு ஒருவர் தழுவி வரவேற்று கொண்டனர். முக்கியமாக ஓவியாவுக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது.

ஆனால் பரணியை மட்டும் யாருமே கண்டு கொள்ளவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும்போது அனைவரையும் எதிர்த்து கொண்டு சென்றதாலோ என்னவோ, எல்லோரும் புறக்கணித்தது போல இருந்தது.

வீடே கலகலப்பாக இருக்க சிறிது நேரம் யாரும் பேச அளில்லாததால் பரணி மட்டும் தனிமை படுத்தப்பட்டது போல இருந்தார். பிக்பாஸ் வீட்டின் சுவர்களையே வெறித்து பார்த்தபடி இருந்தார்.

ஆனால் ஆறுதல் அளிக்கும் விதமாக ஓவியா மட்டும் பரணியிடம் சகஜமாக பேசினார். அதனையடுத்தே ஆர்த்தி உள்பட ஒரு சிலர் பேசினார்கள். இது பரணிக்கு நிச்சயம் மன வருத்தத்தை அளித்திருக்கும் என கூறப்படுகிறது. இந்த வருத்த பிக்பாஸ் மேடையில் மாறியது. பரணியை மேடையில் பேச வைத்து அழகு பார்த்தார் கமல்.

Comments

comments