cByOg64k22405837_489641484745447_6409877076604795792_n

விவேகம் படத்தின் வெற்றிக்கு பிறகு ஓய்வு எடுத்து வருகிறார் அஜித். அடுத்த படமும் இயக்குனர் சிவாவுடன் மீண்டும் இணைகிறார் என்று செய்தி வலம் வருகிறது.

இந்நிலையில் அடுத்த படத்தில் அஜித் போலீஸ் கதை களத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் கசிகிறது. ஏற்கனவே இயக்குனர் சிவா கார்த்தி வைத்து போலீஸ் கதைக்களத்தில் சிறுத்தை எடுத்தார், இப்படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

அதே போல் ஒரு லோக்கல் போலீஸ் கதை தான் களமாக ஐடியா வைத்துள்ளார் என்கிறார்கள் இயக்குனர் சிவா வட்டாராம்

இதுபற்றி விரைவில் அறிவிப்பு வரும் என்று தல தரப்பில் சொல்லப்படுகிறது.

இயக்குனர் யார் என்பதை இன்னும் தெளிவாக அறிவிக்காத நிலையில். சிவா இல்லாமல் வேறொரு இயக்குனருக்கு அஜித் வாய்ப்பு கொடுக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அஜித் கையில் முடிவு ! என்ன செய்கிறார் பார்ப்போம். ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்வாரா ?!

Comments

comments