RWhG8UrXdsarews

நீயா நானா நிகழ்ச்சியில் கேரளத்து பெண்கள் அழகா தமிழ்நாட்டு பெண்கள் அழகா என்று ஒளிபரப்ப உள்ள நிகழ்ச்சியை ரத்து செய்ய வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறுதோறும் நீயா நானா நிகழ்ச்சியில் ஏதேனும் ஒரு தலைப்பில் விவாதம் நடத்தப்படும். இந்த வாரத்தின் நிகழ்ச்சியாக கேரளாப் பெண்கள் அழகா, தமிழகப் பெண்கள் அழகா என்ற தலைப்பில் பெண்களை மையப்படுத்தி விவாத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சிக்கான ப்ரமோ டுவிட்டர், முகநூல் மற்றும் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டது. பெண்களை இழிவுபடுத்தும் விதமாக காட்சிப் பொருளாகவே பார்க்கும் வகையில் இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளதாக கடும் விமர்சனங்கள் எழுந்தன.மேலும் ஒரு பக்கம் கேரளப் பெண்களையும் மற்றொரு பக்கம் தமிழ்நாட்டு பெண்களையும் அமர வைத்து நடத்தும் விவாத நிகழ்ச்சியும் ஒரு வகையில் இனவெறி தூண்டுதல் என்றும் கண்டனங்கள் எழுந்தன.

makkal-mandram-complaintப்ரமோ வெளியான சில மணி நேரங்களிலேயே அது 1 கோடி பார்வையாளர்களை எட்டியது.இந்நிலையில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பை ரத்து செய்ய வலியுறுத்தி காஞ்சிபுரத்தை சேர்ந்த மக்கள் மன்றம் என்ற அமைப்பு காஞ்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஒரு புகார் மனுவை அளித்துள்ளது. பெண்களை அறிவுக்கு சம்பந்தமில்லாதவர்களாகவும் காட்சிப் பொருளாகவும் பார்க்கும் ஆணாதிக்க போக்கை வெளிக்காட்டும் வகையில் இந்த நிகழ்ச்சி உள்ளது.

Comments

comments