maxresdefault (2)

விஜய் நடிப்பில் மெர்சல் நேற்று உலகம் முழுவதும் 3500 திரையரங்குகளில் வெளிவந்தது. இப்படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

உச்ச நடிகர்களை பொறுத்தவரை முதல் நாள் வசூல் என்பது மிக முக்கியம், ஏனெனில் அதிக பட்ஜெட் படங்களுக்கு முதல் நாள் வசூல் அதிகம் இருந்தால் தான் போட்ட பணத்தை எடுக்க முடியும்.

அந்த வகையில் மெர்சல் தமிழகத்தில் மட்டுமே ரூ 22 கோடி வரை முதல் நாள் வசூல் செய்துள்ளது, இதன் மூலம் நீண்ட நாட்களாக முதலிடத்தில் வசூலில் இருந்த கபாலியை மெர்சல் பின்னுக்கு தள்ளியுள்ளது.

கபாலி முதல் நாள் ரூ 21.5 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது, இதற்கு முன் வந்த விவேகம் ரூ 17 கோடி முதல் நாள் வசூல் செய்திருந்தது. இதன் மூலம் விஜய் தமிழகத்தின் வசூலில் நம்பர் 1 இடத்திற்கு வந்துள்ளார்.

Comments

comments