v7JevK2xmersal-nastam-660x330

‘மெர்சல்’ படத்தின் தெலுங்கு பதிப்பான ‘அதிரந்தி(Adirindhi)’ திட்டமிட்டப்படி வெளியாகாததால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கிறது ‘மெர்சல்’. தமிழில் விலங்குகள் நல வாரியம் மற்றும் தணிக்கையிலும் சிக்கல் ஏற்பட்டதால் இறுதிக்கட்டத்தில் வெளியாகுமா, ஆகாதா என்ற சூழல் நிலவியது.

மேலும், அப்பணிகள் முடிக்கப்பட்டு சப்-டைட்லிங் உள்ளிட்ட பணிகளையும் இறுதிகட்டத்தில் முடித்து வெளியாகியுள்ளது. இதனிடையே ‘மெர்சல்’ தெலுங்கு பதிப்பான ‘அதிரந்தி’ திட்டமிட்டப்படி தீபாவளியன்று வெளியாகவில்லை. இதனால் தயாரிப்பாளருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் விஜய்க்கு நல்ல வியாபார சூழல் இருக்கும் நிலையில், அங்கு திட்டமிட்டப்படி வெளியாகாததால், சில கோடிகள் நஷ்டத்தில் தள்ளி விட்டிருக்கிறது இந்த பிரச்சனை.

தெலுங்கிற்கான தணிக்கைப் பணிகள் இன்னும் முடிவடையாத காரணத்தால் மட்டுமே வெளியாகாமல் இருக்கிறது. விரைவில் அப்பணிகள் முடிக்கப்பட்டு வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்று படக்குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

comments