yLoMbIrM7591

வடிவேலு என்ற கலைஞனை டாப் 5 என்ன டாப் 50க்குள் கூட யாராலும் அடைக்க முடியாது. அப்படி நம் வாழ்நாள் முழுவதும் ஏதோ ஒரு விஷயத்தில் வடிவேலு இருந்துக்கொண்டே தான் இருப்பார்.

நம் இன்பம், துன்பம் என வாழ்வின் அத்தனை தருணங்களிலும் வடிவேலுவின் காமெடி எப்படியும் மேட்ச் ஆகி சென்றுவிடும், அப்படி நம் மனம் கவர்ந்த வடிவேலுவின் 5 கதாபாத்திரங்களை பார்ப்போம்.

கைப்புள்ள

என்ன தான் வடிவேலு பல படங்களில் காமெடியில் கொடிக்கட்டி பறந்தாலும் அவருக்கே பெரிய திருப்புமுனை கொடுத்த படம் என்றால் வின்னர் தான், இதில் இவர் கைப்புள்ளையாக செய்யும் அட்டகாசங்களுக்கு இன்றைய மிமி கிரியேட்டர்களே சாட்சி. இந்த படத்தை பற்றி ஒரு சிறிய சுவாரசிய தகவல் சொல்ல வேண்டுமென்றால், வடிவேலு இந்த படத்தில் நொண்டி நடப்பது மேனரிசம் இல்லை, உண்மையாகவே அவருக்கு காலில் அடிப்பட்டு இருந்தது, அதையே மேனரிசமாக மாற்றிவிட்டார்.

நேசமணி

கோவாலு நான் தாண்டா உன் பாஸு நேசமணி என்று சார்லீயிடம் கெஞ்சும் இடத்திலும் சரி, ‘நல்ல குற்றாலத்துல இருக்க வேண்டியது எல்லாம் எங்கிட்ட இருக்குது’ என்று விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களை திட்டும் போதும் செரி காண்ட்ரைக்ட்டர் நேசமணியாகவே வடிவேலு வாழ்ந்திருப்பார்.

சூனா பானா

விட்றா விட்றா சூனா பானா என இந்த நாட்டிற்கு பல சூனா பானாக்கள் சுற்றிக்கொண்டு தான் இருக்கின்றனர், இருப்பார்கள், அவர்களை எல்லாம் பல வருடத்திற்கு முன்பே நம் கண்முன் கொண்டு வந்தவர் தான் வடிவேலு. பஞ்சாயத்தில் மிரட்டுவது, விஷம் குடித்து கதறுவது என அனைத்து பால்களிலும் வடிவேலு 6 தான்.

ஸ்டீவ் வாக்

இன்றும் இங்கிலீஷ் தெரியவில்லை என்றாலும் தெரிந்த பட்லர் இங்கிலீஷ் வைத்து பீட்டர் விடும் இளைஞர்களுக்கு ஸ்டிவ் வாக் தான் குலத்தெய்வம், பாய்சன் அட்டாக்கிங் கலர் சேஞ்சிங் என புதுபுது இங்கிலிஷ் வார்த்தைகளை நம் இளைஞர்களுக்கு கொடுத்தது இந்த ஸ்டிவ்வாக் தான்.

எசக்கி

என்ன தான் வடிவேலு காமெடியில் கரகம் எடுத்து சுற்றினாலும் அவருக்குள் மிகப்பெரும் குணச்சித்திர நடிகர் மறைந்துள்ளார், அதை வெளியே கொண்டு வந்தது தேவர் மகன் படத்தின் மூலம் கமல் தான், ஒரு கை வெட்டப்பட்ட நிலையில் இந்த உயிரே உங்களுக்கு தான் சார் என்று அவர் மருத்துவமனையில் பேசும் காட்சியெல்லாம் வேற லெவல்… நீ நடிகன்யா என்று சொல்ல வைக்கும்.

இப்படி கணக்கே செய்ய முடியாத அளவிற்கு நம் மனதை விட்டு நீங்காது பல கதாபாத்திரங்களில் அவர் நடித்துள்ளார், அதை சொல்ல வேண்டுமென்றால் இன்றைய நாள் போதாது, அதன் காரணமாகவே இந்த டாப் 5 லிஸ்ட், இதை தாண்டி உங்களுக்கு பிடித்த வடிவேலு கதாபாத்திரத்தை கமெண்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்.

மேலும் சினிஉலகம் சார்பாக வடிவேலு அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், உங்கள் வெற்றிப்பயணம் மெர்சல் மூலம் தொடரட்டும்..டும்

Comments

comments