60144506

அஜித் எப்போதும் தன் ரசிகர்களுக்காக தான் படம் செய்வேன் என்று கூறினார். தற்போது அவருடைய ரசிகர்களே அஜித்திடம் இருந்து சில மாற்றங்களை எதிர்ப்பார்க்கின்றார்கள்.

வெறும் மாஸ் படங்கள் மட்டும் போதாது என்னை அறிந்தால் போல் கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கவேண்டும் என்பது தான்.

இது அஜித் காதுகளுக்கு சென்றதா? என்று தெரியவில்லை, ஆனால், தன் அடுத்தப்படத்தில் அஜித் மீண்டும் தன் பழைய தோற்றத்தில் சால்ட் அண்ட் பெப்பர் இல்லாமல் நடிப்பதாக முடிவெடுத்துள்ளாராம்.

அந்த படத்தை யார் இயக்குவது என்று இன்னும் முடிவாகவில்லை, ஆனால், அஜித் சிவாவுடன் இன்னொரு படம் பணியாற்றுவது உறுதி, அந்த அடுத்தப்படமா? என்பது சந்தேகம் தான்.

Comments

comments