நடிகர் தனுஷுக்கு மற்ற பல ஹீரோக்களுக்கு இல்லாத ஒரு குணம் இருக்கவே செய்கிறது. அது ஒருவரை தனக்கு பிடித்துப்போனால் அவர் பின்னாளில் தனக்கு போட்டியாக வருவார் என்றெலாம் எண்ணாமல் அவர்களை வளர்த்து விடுவது. இதுவே சில நேரங்களில் அவருக்கு எதிராக திரும்பிய நிகழ்வுகளும் உண்டு.

தொலைக்காட்சிகளில் மட்டுமே தலைகாட்டி வந்த சிவகார்த்திகேயனை தனது ‘3’ படத்தில் அறிமுகப்படுத்தியதோடு அவரை வைத்து தொடர்ந்து படங்களும் தயாரித்து அவரின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றினார் தனுஷ்.

இப்போது தனுஷின் அன்பு பார்வை மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகரான டொவினோ தாமஸ் பக்கம் திரும்பியுள்ளது.. முதன்முதலாக தான் மலையாளத்தில் தயாரிக்கும் ‘தரங்கம்’ படத்தில் டொவினோ தாமஸை ஹீரோவாக ஒப்பந்தம் செய்த தனுஷ், அடுத்து இரண்டாவதாக தயாரிக்கும் ‘மரடோனா’ படத்திலும் அவரையே ஹீரோவாக்கி உள்ளார்.

பிரேமம் புகழ் சாய் பல்லவி, பிடா படம் மூலம் தெலுங்கிலும் பிரபலமாகி விட்டார். அதையடுத்து தற்போது நானியுடன் எம்சிஏ மற்றும் தமிழ், தெலுங்கில் ஏ.எல்.விஜய் இயக்கும் கரு ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

இதில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் கரு படத்தில் 4 வயது சிறுமிக்கு அம்மாவாக மெச்சூரிட்டியான வேடத்தில் நடிக்கிறார் சாய் பல்லவி.இதையடுத்து பாலாஜிமோகன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் மாரி-2 படத்திலும் நாயகியாக சாய் பல்லவி நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘வடசென்னை’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். அதனைத் தொடர்ந்து ‘மாரி 2’ படப்பணிகளில் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார்.

அக்டோபரில் தொடங்கும் ‘மாரி 2’ படத்தை பாலாஜி மோகன் இயக்க, தனுஷ் தயாரிக்கவுள்ளார். ஒளிப்பதிவாளராக ஓம்பிரகாஷ், முதற்பாகத்தின் கதாபாத்திரம் போலவே ரோபோ ஷங்கர் மற்றும் வில்லனாக டோவினோ தாமஸ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.

தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாகவுள்ள இப்படத்தின் நாயகி யார் என்பது தெரியாமல் இருந்தது. தற்போது சாய்பல்லவி நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

இசையமைப்பாளர் மற்றும் இதர கதாபாத்திரங்களை முடிவு செய்வதில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. மேலும், படப்பிடிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்யும் பணியிலும் இயக்குநர் பாலாஜி மோகன் ஈடுபட்டு வருகிறார்.

இப்போது இன்னும் ஒருபடி மேலே போய், தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் தான் நடிக்கவுள்ள ‘மாரி-2’ படத்தில் வில்லனாகவே நடிக்க வைத்துள்ளார் தனுஷ். மலையாள நடிகர்கள் தமிழில் ஒரு இடத்தை பிடிக்க துடிக்கும் இந்த வேளையில், தமிழில் எளிதாக கால் பதிக்க வாய்ப்பாக கிடைத்துள்ள தனுஷின் அன்பை கெட்டியாக பிடித்துக்கொள்ள முடிவுசெய்துவிட்டாராம் டொவினோ தாமஸ்.

Comments

comments