solo-740x431

திரையுலக நலனுக்காக பாடுபடுவதாக சீன் போட்டுக் கொண்டிருக்கும் திரையுலக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், சிறுபடத் தயாரிப்பாளர்களை, இயக்குநர்களை எண்ணிப்பார்ப்பதில்லை.

கடந்த ஜூன் மாதம் திடீரென தியேட்டர்கள் ஸ்டிரைக் என அறிவித்தனர்.

அப்போது சில படங்கள் ரிலீஸாகி ஓடிக்கொண்டிருந்தன.

அவற்றில் இவன் தந்திரன் படத்துக்கு நல்ல வரவேற்பு.

வெற்றிப்படமாகி இருக்க வேண்டிய அந்தப் படத்தை தியேட்டர் ஸ்டிரைக் என்ற பெயரில் சாகடித்தார்கள்.

அதன் பிறகு அதாவது ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்ட பிறகு இவன் தந்திரன் ரீரிலீஸ் செய்யப்பட்டது.

ஆனால் முந்தைய வசூல் இல்லை.

இடைப்பட்ட நாட்களில், திருட்டு டிவிடியில் திகட்ட திகட்ட பார்த்து முடித்துவிட்டனர்.

ஜூன் மாத ஸ்டிரைக்கில் இவன் தந்திரன் படத்தை கொலை செய்தவர்கள், நாளை முதல் நடைபெறவிருக்கும் ஸ்டிரைக்கில் மீரா கதிரவனின் விழ்த்திரு படத்தை கொலை செய்துள்ளனர்.

தயாரிப்பாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம், தியேட்டர் அதிபர்கள் சங்கம் தன்னிச்சையாக எடுக்கும் இதுபோன்ற அவசர முடிவுகள் சிறுபடத்தயாரிப்பாளர்களை சவக்குழியில் இறக்குவதை எவரும் எண்ணிப்பார்ப்பதில்லை.

அவசரஅவரமாக அறிவிக்கப்படும் இதுபோன்ற வேலைநிறுத்த அறிவிப்புகள் தயாரிப்பாளர்கள் மத்தியில் மிகப்பெரிய   கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தயாரிப்பாளர்களுக்கான வாட்ஸ்அப் குரூப்பில் ஏக வசனத்தில் கழுவி ஊற்றி வருகின்றனர்.

அவற்றில் சில பதிவுகள் இங்கே…

………

நண்பர்களுக்கு வணக்கம்!

நேற்று அவசரமாக சினிமாவின் விற்பன்னர்கள் ஒன்று கூடி செத்துக்கொண்டிருக்கும் தமிழ் சினிமாவைக் காப்பாற்ற வேண்டும், அதோடு சினிமா தியேட்டர்களையும் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இப்போது திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் படங்கள் தவிர, புதிதாய் எந்தப் படத்தையும்… கவனிக்க! எந்த மொழிப்படமாக இருந்தாலும், திரையிடக் கூடாது என்று முடிவு செய்யப்பட்டதாகவும், அதற்கு கிட்டத்தட்ட அனைத்துத் திரையரங்க உரிமையாளர்களும் சம்மதித்ததாகவும், ஆனால் சென்னையில் இருக்கும் ஒன்றிரண்டு மல்டிப்ளக்ஸ் தியேட்டர்காரர்கள் முணுமுணுத்ததாகவும் கேள்வி.

நிற்க!

‘விழித்திரு’ என்ற மீரா கதிரவனின் படம் ஏழு கடல் ஏழு மலை என்று துன்பப்பட்டு, துயரப்பட்டுக் கடந்து ஒரு வழியாய் ரிலீஸுக்குத் தயாரானது. அந்த மீரா கதிரவனின் துன்பங்களை ஓரளவு நேரில் கண்டிருக்கிறேன். அந்த ஓரளவுக்கே சிவந்த நிறத்தில் கண்ணீர் சிந்த வேண்டிய நிலை.

சங்கங்கள் கூடி “இனி மறு அறிவிப்பு வரும்வரை ரிலீஸ் செய்யக் கூடாது” என்ற உத்தரவு போட்டதும், என்ன செய்வதென்று தெரியாமல் புலம்பிக் கொண்டிருக்கிறார். தன் புலம்பலின் ஒரு பகுதியைக் குரல் பதிவாகவும் போட்டிருக்கிறார்.

போகட்டும்.

solo1-394x700

‘ஸோலோ’ என்ற மலையாள, தமிழ்ப் படம் சங்கங்களின் கட்டுப்பாட்டையும் மீறி கோலாகலமாக இன்று ரிலீஸாகி இருக்கிறது.

டிக்கெட் புக்கிங் விறுவிறுப்பாக நடக்கிறது.

ஒரு தயாரிப்பாளராய் எனக்குச் சில கேள்விகள்:

… தமிழ்ப் படம் எடுப்பவர்கள் மட்டும் பாவப்பட்டவர்களா?

… சங்கக் கட்டுப்பாட்டை மீறிய அந்தத் தயாரிப்பாளரை நாம் என்ன செய்யப் போகிறோம்?

… நமக்கு ஒத்துழைப்புத் தராத திரையரங்குகள் மேல் நம் நடவடிக்கை என்ன?

உறுதியான நடவடிக்கைகள் மட்டுமே நம் அமைப்பையும், தொழிலையும் சீர் படுத்தும் என்று நம்பும் பெருங்கூட்டத்தில் நானும் ஒருவன்.

கஸாலி
திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர்

……..

“தூங்கும் நபரை எழுப்ப முடியும்….. ஆனால் தூங்குவது போல் நடிக்கும் நபர்களை ஒருபோதும் எழுப்ப முடியாது……..எத்தனை ரூபாய்க்கு ஸ்டிரைக் …. 6…. ரூபாய்க்கு….. இந்தப் பணம் யாருடையது….. படம் பார்க்க வரும் ரசிகர்கள் பணம்…..ஆனால் என்னமோ சொந்த காசை பட்டபடுறமாதிரி கத்துறாங்க ….. இவர்கள் அனைவருக்கும் சில கேள்விகள்….. இவர்கள் அனைவரும் கூறுவது சிறுபடங்களை அழிக்க வேண்டும் என்பதுதான்…..

சிறுபடத் தயாரிப்பாளர்களே!!! சக தயாரிப்பாளர்களே!!!

அரசு விதித்துள்ளது 10%வீதம் வரி…… இதனால் படம் பார்க்க வரும் நபர்கள் விலை அதிகம் உள்ளது என்று கூறி படம் பார்க்க வரமாட்டார்கள்……சரி….. இது உண்மை நிலையா……. இல்லை…… நம்மை சுற்றி வளைத்து பிடித்து சிறிய படங்களை நசுக்கும் செயல் மட்டுமே…….

இது தியேட்டர் அதிபர்களும்….. சில பெரிய படம் எடுக்கும் புதிய தயாரிப்பாளர்கள் மட்டுமே….. இவர்கள் 10%வீதம் வரி ஏத்தினால் மக்கள் படம் பார்க்க வரமாட்டார்கள் …..

அப்படி என்றால் பல வருடங்களாக டிக்கெட் விலை ஏற்றவில்லை ….. அதை அரசு ஏற்றி தரவேண்டும் என்கிறார்கள்……. மக்களுக்கு இது சுமையாகாதா…… யோசியுங்கள்….. 10 மட்டுமே அதிகம்….. அப்படி தானே….. இதிலும்….. தயாரிப்பாளர்களுக்குத்தான்…… நஷ்டம்…… ஆனால் தியோட்டர் முகலாளிகள் தங்களுக்கு நஷ்டம் என்பதை போல் கண்ணீர் வடித்து….. இதற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் துணை போவது வேடிக்கையா இல்லையா…….

படத்தின் டிக்கெட் விலை…. 60 ரூபாய்…. பார்க்கிங் 50 ரூபாய்…… உள்ளே போனால் தண்ணீர் தாகம் வந்தால் தண்ணீர் கிடையாது…. தண்ணீர் பாட்டில் விலை ஹோல்சேல் கடையில் 7ரூபாய் தான்…… வெளியில் கடையில் 15 ரூபாய்….. ஆனா தியேட்டர்ல 30 ரூபாய்…… இது விலையேற்றம் இல்லையா……
குளிர் பானங்கள்…… GST சேர்த்து எல்லா இடத்திலும் ஒரே விலைக்கு விற்று வரும் போது…… தியேட்டரில் மட்டும் ஏன் இப்படி அதிகவிலை…… இதில் தயாரிப்பாளருக்கு பங்கு உண்டா….. இது விலை ஏற்றம் இல்லையா……

இன்னும் எத்தனை எத்தனையோ…… இப்படி எல்லாம் சம்பாதிக்க வேண்டும் என்றால்……. தியேட்டர்களில் பெரிய பெரிய படங்கள் மட்டுமே ஓடணும்… அப்போ சின்ன தயாரிப்பாளர்களின் கதி…… அதோ கதிதான்…… இதற்காகவே….. இந்த நாடகம்…..

இந்த வரியை வசூலிப்பது மக்களிடம்…… இதை வசூல் செய்தால் மட்டுமே அரசு சின்ன படங்களுக்கு மானியம் தரமுடியும்……

கடந்த முறை அனைவரது படங்களுக்கும் வரிகள் விலக்கு என்று அரசு செய்ததில்….. எத்தனை தயாரிப்பாளர்களுக்கு பணம் கையில் வந்தது…… எனவேதான் 10% வரியினால் ஒன்றும் இல்லை….

மேலே குறிப்பிட்ட விஷயம்தான் காரணம்……

சிறிய அளவிலான படங்களை நசுக்குவதே நோக்கம்……

துணை முதல்வர் கோரிக்கைகளை கொண்டுவாருங்கள்…… என்று பொது இடத்தில் வைத்து அழைப்பு விடுத்தார்……

அப்படி இருந்தும் ஏன் இப்படி ஸ்டிரைக்…… இதன் உள் நோக்கம் என்ன……..

ஆகவே சிறுபடத் தயாரிப்பாளர்கள்……சிந்திப்பீர்!!!!

பிரிமூஸ் தாஸ்
திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர்

Comments

comments