1508127952-8508
தளபதி ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரில் இடம்பெற்றுள்ள வார்த்தைகள் பரபரப்பைக் கிளப்பியுள்ளன.

தளபதி படத்திற்கு ஏற்பட்டுள்ள பிரச்னை நீங்கி, படம் எப்போது ரிலீஸாகும் என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. நடக்கிற  சம்பவங்களைப் பார்த்தால், தீபாவளிக்கு ரிலீஸ் ஆவது கஷ்டம்தான் என்கிறார்கள். நேற்று கூட தமிழக முதல்வரைச் சந்தித்து  இதுதொடர்பாகப் பேசினார் தளபதி.
இந்நிலையில் மதுரை ரசிகர்கள் ஒட்டியிருக்கும் போஸ்டரில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் பரபரப்பைக் கிளப்பியுள்ளன. ‘சட்டமன்றம் ஏங்குகிறது… பாராளுமன்றம் பதறுகிறது… மெர்சல் அரசனின் வருகையால்…’ என மதுரை தவிட்டுச்சந்தை தளபதி வெறியர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இருக்கிற பிரச்னை போதாதென்று இதுவேறா என்று வருத்தத்தில் இருக்கிறாராம்  தளபதி.

Comments

comments