மெர்சல் படம் பாஜகவினரை படு பயங்கரமாக மிரட்டியுள்ளது. இதனால் அப்படத்தில் உள்ள காட்சிகளை நீக்க வேண்டும் என அக்கட்சியினர் கெடு விதித்தனர்.

இதனால் அஞ்சிய அப்படத்தின் தயாரிப்பாளடர தரப்பு படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வரும் திங்கள் செவ்வாய் கிழமைகளில் சென்சார் போர்டில் கோரிக்கை கடிதம் கொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது

mersal vijay

mersal vijay

இந்நிலையில் புதிய தலைமுறையின் அக்னிப்பரீட்சை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா மெர்சல் படத்தை இன்டர்நெட்டில் பார்த்ததாக அசால்ட்டாக கூறியுள்ளார்.

மெர்சல் படத்தை இணையத்தில் வெளியான திருட்டு வீடியோ மூலம் பார்த்ததாக கூற வெட்கமாக இல்லையா? என்று பாஜக தேசிய செயலாளர் எச் ராஜாவைக் கேட்டுள்ளார் தயாரிப்பாளர் சங்க தலைவர் மற்றும் நடிகர் சங்க செயலாளர் விஷால்.

mersal

ஒரு தேசியக் கட்சியின் தேசிய செயலாளர் பொறுப்பில் இருப்பவர் பொதுவெளியில் ‘நான் திருட்டுத்தனமாக இணையத்தில் புதிய படத்தை சட்டவிரோதமாகப் பார்த்தேன்’ என்று ஒப்புக்கொண்டிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது.

ஒருவேளை பைரசி எனப்படும் திருட்டுக் குற்றத்தை சட்டபூர்வமாகவே ஆக்கிவிட்டனவா அரசுகள்? அதனால்தான் இந்த விஷயத்தில் சினிமா சிதைந்து அதை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை அழியவிட்டு வேடிக்கை பார்க்கின்றனவா இந்த அரசுகள்? என்ற சந்தேகம் எழாமல் இல்லை.

mersal

எச். ராஜா அவர்களுக்கு… மக்கள் அறிந்த ஒரு தலைவராக இருந்துகொண்டு வெட்கமே இல்லாமல் எப்படி இப்படி பைரசியை ஆதரிக்கிறீர்கள்? உங்களைப் போன்ற ஒரு அரசியல்வாதி ஒரு படத்தின் திருட்டு பிரதியை பார்ப்பது என்பது ஒரு உண்மையான குடிமகனாகவும்,

கடின உழைப்பாளியாகவும், எதைச் செய்வதற்கு முன்பும் ஆழ்ந்து யோசித்து முடிவெடுப்பவனாகவும் உள்ள எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இது மிகவும் தவறான முன்னுதாரணம். இது எங்கள் மனதைக் கடுமையாக பாதித்துள்ளது.

தங்களது செயலுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதோடு பைரசியை ஒழிக்க அரசு கடுமையான சட்டத்தை இயற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” -இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.

Comments

comments