தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக கூறப்படுகிறது. ட்விட்டரில் அரசியல் பேசி வந்த உலக நாயகன் கமல் ஹாஸன் நிஜத்தில் அரசியலுக்கு வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியபோது அந்த மேடையில் அரசியல் பேசினார் அவர்.பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தனது அரசியல் கருத்துகளை மக்களிடம் எளிதில் கொண்டு சென்றார்.

இந்நிலையில் மற்றொரு பிக் பாஸ் பிரபலம் அரசியலுக்கு வருகிறார். தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். தீவிர அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

2016-latest-look-of-junior-ntr-11035-700x500

தனது தாத்தாவின் கட்சியான தெலுங்கு தேசம் கட்சியில் முக்கிய பங்காற்ற விரும்புகிறாராம். பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இரண்டு பேர் அரசியலுக்கு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

comments