3JjcFcHXsre

சென்னை: ஒரு சார்பாக நடந்து கொண்டார் கமல் என்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜூலி தெரிவித்துள்ளார்.

விஜய் டி. வி.யில் பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்தது. 100 நாட்கள் நடைபெற்ற இந்த ரியாலிட்டி ஷோவை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இதில் சில நேரங்களில் கமல் ஒரு சார்பாக நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பிக பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலங்கள் அனைவரும் திரைத்துறையை சேர்ந்தவர்கள். இவர்களில் ஜல்லிக்காடு புகழ் ஜூலியும் ஒருவர்.

தொடக்கத்தில் தூக்கி வைத்து கொண்டாடப்பட்ட ஜூலி இறுதியில் மிகவும் அதிகமாக திட்டப்பட்ட, வெறுக்கப்பட்ட நபராக மாறினார். காரணம் இவரது நடவடிக்கைகள்தான்.

ஓவியாவுக்கு எதிராக ஜூலி செயல்பட்டதில் தனது பெயரை மொத்தமாக கெடுத்துக்கொண்டார் ஜூலி. இந்நிலையில் தற்போது

பிக் பாஸ் 100 நாட்கள் முடிந்து வெற்றியாளரும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜூலி தனது பிக் பாஸ் அனுபவங்களை பிரபல வார இதழ் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் குறித்து ஜூலியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், கல்லூரியில் படிக்கும்போது, மேடையில் அமர்ந்திருந்த அவரை தூரத்தில் இருந்து பார்த்த நான், அவர் அருகிலிருந்து பேச வாய்ப்புக் கிடைத்தது பெரிய பாக்கியம்.

நிகழ்ச்சியில் எல்லார்கிட்டயும் எப்படி மரியாதையா நடந்துக்கிட்டாரோ, அதே மரியாதையை சாதாரண பெண்ணான எனக்கும் கொடுத்தார். ஆனால், சில விஷயங்களில் ஒரு சார்பாக நடந்துகொண்டாரோ என்று எனக்குத் தோன்றுகிறது என கமல் மீது குற்றச்சாட்டை வைத்தார். இது தற்போது கமல் ரசிகர்கள் மத்தியில் கடும் கண்டன அலைகளை கிளப்பி உள்ளது.

Comments

comments