MKc8KFNMlarge_police-166

தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் இருக்கும்  பெரு நகரவாசிகள்  சொந்த ஊர் நோக்கி புறப்படுவார்கள், அவர்கள் திரும்பும் வரையில் வீடுகள் பூட்டிக்கிடக்கும்,

அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி திருட்டுகள் நடப்பதற்கு அதிகம் சான்ஸ் உள்ளது.

அதனால், தமிழக போலீசார் அனைத்து மாவட்டங்களிலும், இரவு நேரத்தில் ரோந்து பணி மற்றும் வாகன பரிசோதனை, எனத் தீவிர கண்காணிப்பில் இருக்கவேண்டும் என டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், அக்டோபர் 14ஆம் தேதி முதல் அக்டோபர் 22ஆம் தேதி வரையில் அனைத்து காவலர்களும் பணியில் கட்டாயம் இருக்கவேண்டும். விடுப்பு எடுக்க கூடாதாம்..

இது குறித்து சென்னைவாசிகள் கூறியது,

தமிழகம் முழுவதும் போலீசார் இரவு பகலாக பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தீபாவளியை மகிழ்ச்சியாகக் கொண்டாடும் மக்கள் வீடு திரும்பும்போது அதிர்ச்சியாகாமல் இருக்க, திருட்டுகளை தடுத்தால் மகிழ்ச்சிதான் என்கிறார்கள்..

Comments

comments