WdyQ2OOhGanesh-Venkatraman-and-Bharani-pacify-a-sobbing-Julie

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடும் விமர்சனங்களுக்கு ஆளானவர் ஜுலி, மக்களின் வெறுப்பையும் அதிகம் சம்பாதித்தார்.

இந்நிலையில் அவர் பேஸ்புக்கில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

அதில்,

மன்னித்தாலும் சில
காயங்கள் மறப்பதற்கில்லை..
தண்டித்தாலும் நான்
தாங்கள் போலில்லை ..

தழும்புகளுக்கு
களிம்பு தடவுவதால் எல்லா
வலிகளும் குணமாவப்போவதில்லை.
குணங்களுக்கு
பிரம்பு விலாசுவதால்
எல்லா கணங்களும்
மாறிவிடுவதில்லை..

அறியாமல் தெரியாமல் செய்த தவறுகளை
நீங்கள் மன்னிப்பதற்கு தயாராக இல்லை ..
நான் என் பிழைகளை உணர்ந்து ..
என் குறைகளை அகற்றி
ஒரு மாற்றத்தை நோக்கி இனி
வாழ்க்கையில் பயணிக்க போகிறேன்..

எனக்கும் ஒரு இதயமுண்டு..
அதிலும் கொஞ்சம் ஈரமுண்டு..
மரண தண்டனையை விட வார்த்தைகளால்
ஆயிரத்திற்கு மேலான தடவைகளில் கொலை செய்து விட்டீர்கள்..
நானும் என்னை உணர்ந்து விட்டேன்…
ஒரு சாதாரண பெண் -#இவள் ஜுலி.

Comments

comments