DLOLUx7UQAEPtJR

100 நாட்கள் பிரமாண்டமாக நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஒருவழியாக நிறைவடைந்து விட்டது. இதில் கலந்து கொண்டவர்கள் பிக்பாசில் தங்களது அனுபவங்கள் குறித்து கருத்துகளை கூறி வருகின்றனர்.

அதுபோல ரைசாவும் பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். அப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிடிக்காத விஷயம் எது என்று கேட்டபோது,

பிக்பாஸ் வீட்டில் எனக்கு பிடிக்காத விஷயம் என்றால் அந்த நாய்தான். அந்த நாய்மட்டும் இல்லாவிட்டால் நான் பிக்பாஸ் பட்டத்தை வென்று இருப்பேன் என்று நகைச்சுவையாக கூறினார்.

மேலும் பிக்பாசில் ஒவ்வொரு சனிக்கிழமையும் அவருக்கு பிடிக்காதாம். ஏனென்றால் அன்று மட்டும் யாராவது ஒருவர் வெளியேற்றப்படுகிறார்.

அதுபோல தன்னையும் ஒரு சனிக்கிழமைதான் வெளியேற்றினார்கள். அதனால் அது எனக்கு பிடிக்காது என்று கூறி உள்ளார்.

Comments

comments