சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்க்ரிப்ட் படி நடக்கிறது என்று கூறுபவர்களுக்கு கமல் ஹாஸன் ஒரு சவால் விடுத்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கிய நாளில் இருந்தே அதை கலாய்க்கவே ஒரு பெரிய கூட்டம் உள்ளது. பிக் பாஸ் வீட்டில் நடப்பது எதுவும் இயல்பானது இல்லை அனைத்தும் ஸ்க்ரிப்ட் படி நடக்கிறது என்று நெட்டிசன்கள் கலாய்க்கிறார்கள்.

ஸ்க்ரிப்ட் விஷயத்தை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்களும் வந்துள்ளது.

கமல்

பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்க்ரிப்ட் படி நடக்கவில்லை என்று அந்த நிகழ்ச்சியை நடத்தும் கமல் ஹாஸன் முன்பே தெரிவித்தார். இந்நிலையில் அவர் தற்போது சவால் விட்டுள்ளார்.

b5ac007792e5d2328ac50c0c5a3ee51b

சவால்

பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்க்ரிப்ட், எல்லாம் டிராமா என்று கூறுபவர்களுக்கு நான் சவால் விடுகிறேன். எனக்கு பெரிய நடிகைகளை எல்லாம் தெரியும். இந்தியாவில் சிறந்த நடிகைகளை எல்லாம் எனக்கு தெரியும். வையாபுரி கிளம்பியபோது அந்த பொண்ணு பிந்து அழுதது போன்று அவர்களை அழுது நடிக்கச் சொல்லுங்கள் பார்ப்போம் என்றார் கமல்.

நடிப்பு

நடிக்கிறது யார் என்று உங்களுக்கு தெரியும். கொஞ்சம் மிகையாகிவிட்டால் கூட ச்ச்சீ என்று உங்கள் மனதில் வருவது எனக்கு தெரியும். அதனால் அந்த பயம் எனக்கு எப்பவுமே உண்டு என்று கமல் தெரிவித்தார்.

உறவுகள்

நட்பு, உறவுகளுடன் இருங்கள் தனித்து இருக்காதீர்கள் என்று கமல் ஹாஸன் கூற அரங்கமே அதிர்ந்தது. கமலின் இது போன்ற அறிவுரைகள் மக்களுக்கு பிடித்துள்ளது.

5accb71dce5a7f54f8da48ac1bb29b41

Comments

comments