களவாணி படத்தில் கதாநாயகியாக அறிமுகமான ஓவியாவுக்கு அந்தப்படம் நல்ல அறிமுகத்தைக் கொடுத்தாலும், பேங்க் பேலன்ஸை அதிகரிக்கவில்லை.

ஓவியாவுக்கு தமிழில் பெரிய பிரேக் கிடைக்கவில்லை.

அதே சமயம், சின்ன பட்ஜெட் படங்கள் மற்றும் இரண்டாம்நிலை ஹீரோக்கள் நடித்த படங்கள் என தொடர்ந்து சில படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

அவ்வப்போது மலையாளத்திலும் தலைகாட்டி வந்த ஓவியாவுக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல்போனது.

இன்னொரு பக்கம் அவரது அம்மா கேன்சர் நோயால் பாதிக்கப்பட,  அவரை கவனித்துக்கொள்வதற்காக தேடி வந்த ஒன்றிரண்டு படங்களையும் தவிர்க்க வேண்டியநிலைக்குத்தள்ளப்பட்டார்.

சில மாதங்களுக்கு முன் ஓவியாவின் அம்மா மரணமடைந்தார்.

அம்மாவின் மரணம் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் படவாய்ப்பும் இல்லாதநிலையில் கடுமையான மன அழுத்தத்தில் இருந்தார் ஓவியா.

OviyaArmy-OviyaaArmy-@OviyaaSweetz-SaveOviya-BiggBossTamil-740x431 (1)

இப்படியொரு சூழலில்தான், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஓவியாவுக்கு கிடைத்தது.

பிக்பாஸ் வீட்டிற்குள் சக போட்டியாளர்களால் அவமானப்படுத்தப்பட்டதால் அவருக்கு மக்கள் மத்தியில் அனுதாபமும், வரவேற்பும் கிடைத்தன.

சமூகவலைத்தளங்களில் ஓவியா ஆர்மி என்ற பெயரில் ஒரு கூட்டம் உருவாகி அவருக்கு துதி பாடும் அளவுக்கு மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த பிறகு மக்கள் மத்தியில் தனக்கு உள்ள பாப்புலாரிட்டியைக் கண்டதும், அதை பணம் பண்ணும் முடிவுக்கு வந்துவிட்டார் ஓவியா.

சாதாரணமாக கடைதிறப்புவிழாவுக்கு 50 ஆயிரம் வாங்கிக் கொண்டிருந்த ஓவியா, தற்போது சென்னையில் சரவணா ஸ்டோர் கடையைத் திறந்து வைக்க 25 லட்சம் வாங்கி இருக்கிறார்.

அதுவும்… காலை 9.30 மணிக்கு ரிப்பன் கட் பண்ணுவேன். 9.45க்கு கிளம்பிவிடுவேன் என்ற கண்டிஷன் உடன்.

அதாவது ஓவியாவின் ரேட்… 15 நிமிடத்துக்கு 25 லட்சம்.

கடை திறப்பு விழாவுக்கே இப்படி கால்கோடி கேட்கிறார் என்றால் படத்தில் நடிக்க எவ்வளவு கேட்பார்?

முன்னணி ஹீரோவின் படத்தில் நடிக்க அண்மையில் ஓவியாவை அணுகியபோது கதையைக் கூட கேட்காமல் 1 கோடி சம்பளம் கேட்டிருக்கிறார்.

அதனாலேயே கலகலப்பு-2, களவாணி- 2 உட்பட பல படங்களில் ஓவியாவுக்கு பதில் வேறு நடிகைகளை தேடி வருகிறார்கள்.

Comments

comments