UwFzl61Vvishal

பல வருஷங்களாகவே தமிழ்சினிமா தயாரிப்பாளர்களின் பாக்கெட்டை உறிஞ்சிக் கொண்டிருக்கிறது தமிழ்ராக்கர்ஸ் இணையதளம்.

திருட்டு விசிடிக்கு எதிராக குட்டிக்கரணம் அடித்து வரும் பலரும், இந்த இணையதளத்தின் குறுக்கு வழி குஸ்தியை சகிக்க முடியாமல் பிளாஸ்திரியோடு திரிகிறார்கள்.

அண்மையில் மனம் புழுங்கிய தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, கடும் ஆத்திரத்தில் சில வார்த்தைகளை உதித்ததை அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் மறந்திருக்க முடியாது.

அவர் மட்டுமா? பலரும் அப்படி நெஞ்சை நிமிர்த்தி பேட்டி அளித்திருக்கிறார்கள். ஆனால், ஒருவரும் செயலில் இறங்கி எதுவும் செய்யவில்லை.

வெறும் வாய்ச்சவடால்தான். எப்படி பட வெளியீட்டுக்கு ஏரியா பிரிக்கிறார்களோ அப்படி ஆன்லைனிலும் பிரிக்க வேண்டும்.

வெளிநாடுகளில் இந்த முறைதான் பின்பற்றப்படுகிறது. இதை தமிழ் சினிமா தவிர்க்கவோ தள்ளிப் போடவோ முடியாது.

ஏனெனில் இணையம்தான் எதிர்காலம். ஒவ்வொரு முறையும் திரைப்பட சங்கங்கள் ஒன்று கூடி நிறைய முடிவுகளை எடுக்கிறார்கள்.

‘ஒரு’ தயாரிப்பாளருக்கு ‘ஒரு’ நடிகர் மேல கோபம். அதன் விளைவுதான் ‘பைரஸி’.

சாதாரணமா வந்தவன் இன்னைக்கு இவ்வளவு சம்பாதிக்கறான்… அவனை எதுக்கு வளர விடணும்? அவன் படம் ரிலீசாகறதுக்கு முன்னாடியே நீங்க ஆன்லைன்ல வெளியிடுங்க என்று சில தயாரிப்பாளர்கள் இந்த இணைய தளங்களை தொடர்பு கொண்டு வேண்டுகோள் வைக்கிறார்கள்.

அதன் விளைவு தான் இந்த அளவிற்கு அபிரிவிதமான வளர்ச்சி. இந்தநிலையில் தற்போது விஷால் தரப்பில் இருந்து தமிழ்கன் , தமிழ்ராக்கர்ஸ் அட்மின்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் கனடா மற்றும் சுவிட்சர்லாந்தில் இருப்பதாகவும் அடையாளம் தெரிந்தால் தகவல் தெரிவிக்கலாம் எனவும் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக கைது செய்யப்பட்டவருக்கும் இந்த இணையதளங்களுக்கும் சம்பந்தம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

21743011_1083457418457546_8132432020404692765_n-300x212

 

 

Comments

comments