0 (1)

நீட் தேர்வு காரணமாக மருத்துவ படிப்பில் சேர முடியாத நிலை ஏற்பட்டதால் மனமுடைந்த அனிதா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார். அவரின் வீட்டுக்கு இன்று சென்ற விஜய் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். மேலும் எந்த உதவியாக இருந்தாலும் செய்ய தயார் என அவர்களுக்கு வாக்குறுதி அளித்தார்.

விஜய்யின் இந்த செயலை பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூர் ஜெயம்கொண்டம் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் ஒரு மாணவி கன்னியாகுமரியில் உள்ள ஆயுர்வேத கல்லூரியில் சேர்ந்துள்ளார்.

அவர் பள்ளிப்படிப்பை ஒரு தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் முடித்தார். மேலும் கல்லூரி கட்டணத்தை விஜய் ரசிகர் மன்றம் செலுத்த வாக்குறுதி அளித்தது.

ஆனால் கட்டணத்தை செலுத்தாததால் அவரை நீக்கிவிட்டனர். அவர் தற்போது வீட்டில் ஆடு மேய்ப்பது உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறார்.

 

Comments

comments