whilemersalgetsonevivegamgetsnone-17-1502950221

‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ தயாரிப்பில் விஜய்யை வைத்து அட்லி இயக்கும் திரைப்படம் ‘மெர்சல்’. இதுவரை விஜய் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வருவதாக சொல்லப்படும் மெர்சல் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.

அதுமட்டுமல்ல, ‘மெர்சல்’ படத்தை தமிழகம் முழுக்க ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனமே வெளியிடவிருப்பதாகவும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்த முடிவுக்கு என்ன காரணம்?

அஜித் நடிப்பில் அண்மையில் வெளியான விவேகம் படத்தைவிட சில பல கோடிகள் கூடுதலாகக் கொட்டி மிகப்பெரிய பட்ஜெட்டில் மெர்சல் படத்தை தயாரித்து வருகின்றனர்.

விவேகம் படத்தின் தமிழக ஏரியா உரிமை சுமார் 55 கோடிக்கு விற்கப்பட்டதால், அதைவிட அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட மெர்சல் படத்தின் தமிழக ஏரியா உரிமையை 65 கோடி முதல் 75 கோடிக்கு விற்க திட்டமிட்டிருந்தனர்.

இதற்கிடையில் விவேகம் படம் வெளியாகி, எதிர்பார்த்த வசூலைக் குவிக்கவில்லை.

தமிழக ஏரியா உரிமை சுமார் 55 கோடிக்கு விற்கப்பட்டதால் தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடி வசூல் செய்தால் மட்டுமே லாபம் கிடைக்கும் என்றநிலையில், அந்த வசூலை விவேகம் எட்டவில்லை.

விவேகம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் செய்யாத காரணத்தினால் சுமார் 25 கோடியை விநியோகஸ்தர்களுக்கு திருப்பிக் கொடுக்கும்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் விவேகம் படத்தின் தயாரிப்பாளர்.

இந்த சம்பவத்தைப் பார்த்த மெர்சல் படத்தின் தயாரிப்பாளர், இதுபோன்ற நிலை தமக்கும் வந்துவிடக்கூடாது எனபதற்காகவே மெர்சல் படத்தை யாரிடமும் விற்காமல் சொந்தமாக தானே வெளியிட முடிவு செய்துள்ளார்.

‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ இப்படியொரு முடிவுக்கு வந்ததற்கு இன்னொரு காரணம்… மெர்சல் படத்தின் மீதுள்ள நம்பிக்கை.

வசூல் ரீதியாக விவேகம் படத்துக்குக் கிடைத்த பின்னடைவு காரணமாக, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்த ஸ்பைடர் படத்தின் வியாபாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஸ்பைடர் படத்தின் தமிழ் டப்பிங் ரைட்ஸை வாங்கிய லைகா புரடக்ஷன்ஸ், அந்தப் படத்தை நேரடி தமிழ்ப்படம்போன்று விளம்பரம் செய்து வருகிறது.

அதை வைத்து ஸ்பைடர் படத்தை பெரியவிலைக்கு விற்கவே முதலில் திட்டமிட்டது.

விவேகம் படத்திற்கு ஏற்பட்ட கதியைக் கண்டு தன் முடிவை தற்போது மாற்றிக் கொண்டுவிட்டது லைகா புரடக்ஷன்ஸ்.

ஸ்பைடர் படத்தை விற்று, ஒருவேளை விவேகம் படத்தைப் போல் ஸ்பைடர் படம் ஓடாமல்போனால் 2.0 பட வெளியீட்டின்போது விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்களும் பிரச்சனை செய்வார்கள். எனவே 2.0 படத்துக்கு எந்த சிக்கலும் வரக்கூடாது என்பதால் ஸ்பைடர் படத்தை தானே சொந்தமாக ரிலீஸ் செய்ய லைகா புரடக்ஷன்ஸ் முடிவு செய்துள்ளது.

Comments

comments