cVheebSZfdasfasfase

மெர்சல் படக்குழு படத்தின் தலைப்பை பதிவு செய்வதில் ஒரு மாபெரும் தவறை செய்திருக்கிறது. விஜய் நடிக்கும் மெர்சல் தலைப்பைத் தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யவில்லை. சவுத் இந்தியன் சேம்பரில் பதிவு செய்துள்ளார்கள். தயாரிப்பாளர் சங்கத்திடமிருந்து என்ஓசி வாங்காமலையே மெர்சல் தலைப்பில் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள்.

சவுத்இந்தியன் சேம்பரில் பதிவு செய்யும் தமிழ்பட தலைப்புகள் தயாரிப்பாளர் சங்கத்திடமிருந்து NOC (No Objection Certificate) பெற்ற பின்னரே பதிவு செய்யவேண்டும். ஆனால், மெர்சல் படக்குழு அதை செய்ய தவறியுள்ளது.

நடிகர் விக்ரம் மற்றும் நடிகரும் இயக்குநருமான தியாகராஜன் ஆகியோருக்கு மறுக்கப்பட்ட மெர்சல் படத்தலைப்பு விஜய்க்கு மட்டும் வழங்கப்பட்டது ஏன் என தயாரிப்பாளர் ராஜேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். மெர்சல் தலைப்பு விவகாரம் தொடர்பாக அதிகாரபூர்வக் கடிதங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய் நடித்து விரைவில் வெளிவரவுள்ள ‘மெர்சல்’ திரைப்படத்தை அக்டோபர் 3 -ஆம் தேதி வரை வெளியிடவும், விளம்பரப்படுத்தவும் இடைக்காலத்தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Comments

comments