‘குரங்கு பொம்மை’ சக்சஸ் மீட்டில் பேசிய பாரதிராஜா, “இதெல்லாம் விட எனக்கு பேர் வாங்கித் தரப்போற இன்னொரு படம் இருக்கு. இப்ப நீங்க பார்த்த பாரதிராஜாவை டோட்டலா அதுல வேற மாதிரி பார்ப்பீங்க” என்றார். அந்தப்படம் ‘படைவீரன்’. படத்தின் இயக்குனர் தனா, மணிரத்னத்தின் சிஷ்யர்! ஹீரோவாக நடித்திருக்கிறார் பிரபல பாடகர் ஏசுதாசின் மகன் விஜய் யேசுதாஸ்!

d4657e47-ac83-4cd9-85c9-2b17d1767273

‘கோலத்தின் லட்சணம் புள்ளி வைக்கும் போதே புரியும்’ என்பதைப் போல, படைவீரனின் மவுசு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது. எப்படி? மிக சமீபத்தில் இப்படத்தை பார்த்தாராம் தனுஷ். “இவ்வளவு நல்ல, அற்புதமான படத்தில் என்னோட பங்களிப்பும் இருக்கணும். ஒரு பாட்டு பாடட்டா?” என்று கேட்க, கூட்டணி மறுபடியும் புதிய பாடலுக்காக ‘சிட்டிங்’ ஆனது!

ப்ரியன் வரிகளுக்கு கார்த்திக் ராஜா ட்யூன் போட, தனுஷ் பாடியிருக்கிறார். ‘லோக்கல் சரக்கா… பாரின் சரக்கா..’. இதுதான் அந்தப்பாடலின் பல்லவி.

பல்லவியே ‘ஆட’ விடுதேய்யா!

Comments

comments