NTlrg_20170928171607571355

மொட்ட சிவா கெட்ட சிவா, சிவலிங்கா படங்களை தொடர்ந்து முனியின் 4ஆம் பாகமான காஞ்சனா-3 படத்தை இயக்கி, நடிக்கிறார் ராகவா லாரன்ஸ். சமீபத்தில் இதற்கான பூஜை நடந்தது.

இப்படத்தில் மூன்று ஹீரோயின் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. அதில் ஒரு ஹீரோயினாக ஏற்கனவே முனியில் நடித்த வேதிகா நடிக்க இருக்கையில் இப்போது இன்னொரு ஹீரோயினாக ஓவியாவும் இணைந்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியாவுக்கான மவுசு அதிகரித்துள்ளது. அதை ஓவியாவும் சரியாக பயன்படுத்தி வருகிறார். தற்போது அவரது கைவசம் இந்த முனி-4-யும் சேர்த்து நான்கு படங்கள் உள்ளன. இது தவிர இன்னும் சில படங்களில் நடிக்க பேசி வருகிறார் ஓவியா.

Comments

comments