txEgU8bA20664054_1573563009330926_6395431706158284214_n

விஜய் நடிப்பில் மெர்சல் படம் தீபாவளி விருந்தால் திரைக்கு வரவுள்ளது. இப்படம் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் நேற்று இப்படம் டீசர் வெளிவந்து பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகின்றது, வெளிவந்த 6 மணி நேரத்தில் அதிக லைக்ஸ் என உலக சாதனை எல்லாம் படைத்துவிட்டது.

தற்போது அஜித் ரசிகர்களால் இந்த டீசர் மோசமான சாதனை ஒன்றையும் பெற்றுள்ளது, அது வேறு ஒன்றுமில்லை, லைக்ஸ் ஒரு பக்கம் குவிந்தாலும் அஜித் ரசிகர்கள் டிஸ்லைக் செய்ய வேகமாக கிளம்பிவிட்டனர்.

இது இன்று நேற்று தொடங்கியது இல்லை, யு-டியூப் தொடங்கி எப்போது இந்த டீசர் கலாச்சாரம் வந்ததோ அப்போதே இந்த போர் தொடங்கிவிட்டது.

இதுவரை மெர்சல் டீசரை 147K பேர் டிஸ்லைக் செய்துள்ளனர், இதன் மூலம் தமிழ் சினிமாவில் இதுவரை வந்த டீசரில் அதிகம் பேர் டிஸ்லைக் செய்தது இதை தான் என கூறப்படுகின்றது.

Comments

comments