vIc0PJ6Fsdarwe3

விழித்திரு என்ற திரைப்படத்தின்  செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நடிகர் டி.ராஜேந்தர் நடிகை தன்ஷிகாவை விமர்சித்து விழா மேடையில் அடுக்கு மொழியில் பேசியதால் விழா மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதார் நடிகை தன்ஷிகா.

விழாவில் கலந்து கொண்ட தன்ஷிகா நிகழ்ச்சியில் அனைவருக்கும் நன்றி கூறினார். அப்போது, டி.ராஜேந்தரின் பெயர் மட்டும் விடுபட்டுவிட்டது. பிறகு, டி.ராஜேந்தரின் காலில் விழுந்து மன்னிப்பும் கேட்டார் நடிகை தன்ஷிகா.

இதனால் கோபமான நடிகர் டி.ராஜேந்தர் தனக்கே உரிய அடுக்குமொழி பாணியில் நடிகை தன்ஷிகாவை தாறுமாறாக விமர்சித்தார். “நீயெல்லாம் என் பெயரை சொல்லியா நான் வாழப்போறேன்” “நான் ஹன்ஷிகா-வ பத்தியே கவலைபாடாதவன், தன்ஷிகா பத்தியா கவலை பட போறேன்” என்று சகட்டுமேனிக்கு வருத்தெடுத்து விட்டார். இதனால் மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதார் நடிகை தன்ஷிகா.

இதனை பார்த்த ரசிகர்கள் எதோ அவரது பெயரை மறந்து விட்டார். அதற்காக இப்படியா ஒரு நடிகையை மேடையிலேயே அசிங்கப்படுத்துவது என டி.ராஜேந்தர் மீது விமர்சனத்தை வைத்து வருகிறார்கள் ரசிகர்கள்.

Comments

comments