இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘மெர்சல்’ படத்தின் பாடல் வரிகளுடன் கூடிய வீடியோ ஒன்று நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதில் விஜய், காஜல் அகர்வால் அடங்கிய புதுப்புது ஸ்டில் வெளியாகியுள்ளது.

1504661552-5406
இந்த ஸ்டில்கள் அனைத்தும் அட்டகாசமாக இருப்பதாக விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ஒருசில நெட்டிசன்கள் இந்த ஸ்டில்கள் அனைத்துமே காப்பி என்றும் இதே போஸ்களில் ஏற்கனவே ஹாலிவுட் படங்களில் போஸ்கள் வந்துள்ளதாகவும் பதிவு செய்து வருகின்றனர். உதாரணத்திற்கு ஒரு ஸ்டில்லை மேலே குறிப்பிட்டுள்ளோம்
இது ஒரு பக்கம் இருக்க, முன்னரே  வெளியிடப்பட்ட மெர்சல் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் கூட ஒரிஜினாலிட்டி இல்லை. சல்மான்கான் நடித்த சுல்தான் போஸ்டரை நகலெடுத்து வடிவமைத்திருக்கிறார்கள்.
mersalsultan-poster-1024x683

10 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் அட்லீ, சொந்தமாக மூளையை கசக்கி யோசிக்காமல் அடுத்தவர்களின் அறிவைத் திருடுவது ஆரோக்கியமான விஷயமில்லை என்று நெட்டிசன்கள் கிண்டலடிக்கின்றனர்

இதனால் ‘மெர்சல்’ படக்குழுவினர் நொந்து நூலாகியுள்ளனர். கஷ்டப்பட்டு, மூளையை கசக்கி கண்டுபிடித்து ஒருசில போஸ்களுடன் போட்டோஷுட் எடுத்தால் அதை நெட்டிசன்கள் ஒருசில நிமிடங்களில் காப்பி என்று கூறி விமர்சனம் செய்வதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த ஸ்டில்கள் எல்லாம் உண்மையாக்வே காப்பியா? அல்லது தற்செயலாக ஒற்றுமையாக அமைந்ததா? என்பது அந்த கடவுளுக்கே வெளிச்சம்

Comments

comments