GltfryeJsun-pictures-660x330

பிரம்மாண்டமான திரைப்படங்களை தயாரிப்பதில் கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனமும் ஒன்று. இத்தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெறும்.பல்வேறு வெற்றி படங்களை கொடுத்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் சிறிது வருட இடைவெளிக்குப் பின் மீண்டும் ஒரு பிரம்மாண்ட திரைப்படத்தை தயாரிக்க உள்ளது.

கடைசியாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் 2015-ம் ஆண்டு காஞ்சனா-2 திரைப்படத்தை வெளியிட்டிருந்தது.ராகவா லாரன்ஸ்,டாப்ஸி,நித்யா மேனன்,கோவை சரளா நடிப்பில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா படத்தின் முதல் பாகம் (முனி-2) மற்றும் முனி-1 திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தன.காஞ்சனா இரண்டாம் பாகத்திலேயே முனி-4 அதாவது காஞ்சனா படத்தின் மூன்றாம் பாகமும் தொடரும் என லாரன்ஸ் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

தற்போது இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளது. லாரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா மூன்றாம் பாகத்தை தயாரிக்க இருப்பதாக தனது டிவிட்டர் பக்கத்தில் சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Comments

comments