இந்த இருவரும் நடிகர் சங்க அரசியில், தேர்தல், அதில் இரு அணிகளாக பிரிந்து மோதிக் கொண்டது இவை அனைத்தும் நாம் அறிந்த விஷயமே . இந்நிகழ்வே   சஸ்பென்ஸ் படம் போல சுவாரசியமான  ஒன்றாகும் .

மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, வினய் , ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ள துப்பறிவாளன் படம் செப்டம்பர் 14 வியாழன் அன்று வெளியாகிறது .

thupparivaalan-1024x576

அதே போல் கோவையை மையமாக கொண்டு சரத்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் சென்னையில் ஒரு நாள் – 2 படம் செப்டம்பர் 15 ரிலீஸ் ஆகிறது . ஜே பி  ஆர் இயக்கியுள்ள இப்படத்தில் மாவீரன் நெப்போலியன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் .

chennayil-oru-naal-2

இந்நிலையில் தற்பொழுது பாக்ஸ் ஆஃபிஸில் சரத்குமார் மற்றும் விஷால் தங்கள் படம் மூலமாக நேரடியாக மோதப்போகிறார்கள். இப்போட்டியில் யார் ஜெயிக்கிறார்கள் என்று அடுத்த வாரம் நமக்கு விடை கிடைத்து விடும்.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்: வரலக்ஷ்மி இதில் யார் நடித்த படத்தை முதல் டே முதல் ஷோ பார்ப்பார் ?

Comments

comments