சென்னை வடபழனியில் நடைபெற்ற மாணவி அனிதா உரிமை ஏந்தல் நிகழ்ச்சி, இயக்குநர்கள் மற்று உதவி இயக்குநர் சார்பில்  ஏற்பாடு செய்யப்பாடு செய்யப்பட்டது. அதில் கலந்து கொண்ட இயக்குநர் அமீர் மற்றும் ரஞ்சித் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

1504857571-68
சென்னை ஆர்.கே.வி.ஸ்டுடியோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இயக்குநர் அமீர் பேசும்போது, நாம் சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு தமிழர்களாக ஒற்றுமையாக இருக்கிறோம். என்றார்.
அப்போது மேடையை நோக்கி ஆவேசமாக வந்த ரஞ்சித், நாம் எங்கே ஒற்றுமையாக இருக்கிறோம்? எல்லா ஊர்களிலும்  பிரிவினை உள்ளது. சாதியால் பிரிந்திருப்பதை ஒத்து கொள்ளுங்கள். சாதி இல்லை என்று சொல்லாதீர்கள். ஒற்றுமை என்று கண்துடைப்பு செய்துகொண்டு இருக்கிறோம் என்று ஆவேசமாக பேசினார்.
இதனை தொடர்ந்து மேடைக்கு வந்த இயக்குநர் ராம் உள்ளிட்டவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர். இதனால் அங்கு  சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Comments

comments