lVq6mp91sdfafasf (1)

நடிகர் ஜெய் ஓட்டிச் சென்ற ஆடி சொகுசு கார் தாறுமாறாக ஓடி சாலை தடுப்புச் சுவரில் மோதியது. குடிபோதையில் காரை ஓட்டிச் சென்றதாக நடிகர் ஜெய் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை 28, சுப்பிரமணியபுரம், ராஜாராணி உள்பட பல்வேறு தமிழ்ப்படங்களில் கதாநாயகனாக நடித்தவர் நடிகர் ஜெய். நேற்று அதிகாலை 2.30 மணியளவில் ஒரு விருந்தில் கலந்து கொண்டு ஜெய் தனது ஆடி சொகுசு காரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அடையாறு மேம்பாலத்தில் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்த கார் திருவான்மியூர் சிக்னல் அருகில் சென்ற போது திடீரென கார் நிலை தடுமாறி ஓடி, அங்கிருந்த சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் நின்றது. கார் மோதியதில் தடுப்புச் சுவர் முற்றிலும் சேதமடைந்தது. ஜெய்யின் காரின் முன்பகுதியும் பலத்த சேதமடைந்தது. ஆனால் அவருக்கோ ரோட்டில் நடந்து சென்றவர்களுக்கோ எந்த வித காயமும் இல்லை. நள்ளிரவில் திருவான்மியூரில் நடந்த இந்த விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

MIMAGEf5c6b09a42a3908e01918b9d59c824f7

 

கார் மோதியதைக் கண்டதும் அங்கு நடந்து சென்றவர்கள் ஓடிவந்தனர். போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சாஸ்திரி நகர் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் அங்கு விரைந்து சென்றனர். காருக்குள் அரை மயக்கத்தில் இருந்த நடிகர் ஜெய்யை மீட்டனர். அப்போது அவர் உச்கட்ட குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. விபத்தின் போது ஜெய்யுடன் நடிகர் பிரேம்ஜியும் இருந்தார். காரைப் பறிமுதல் செய்த போலீசார் திருவான்மியூர் ஆர்டிஓ அலுவலகத்துக்கு சோதனைக்காக காரை அனுப்பி வைத்தனர். ஜெய் மீது குடிபோதையில் கார் ஓட்டுதல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தது, வேகமாக வாகனம் ஓட்டியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்து ஜெய்யை கைது செய்த போலீசார் அவரை சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.

இந்நிலையில் ஜெய்யின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய போக்குவரத்து போலீஸ், வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.

இதில் இவர்கள் இருவருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

“பார்ட்டி” படப்பிடிப்பு  முழுவதும் முடிந்துள்ளதை கொண்டாடும் விதமாக, இன்றும் எம்ஆர்சி நகரில்  உள்ள தனியார் ஓட்டலில் பார்ட்டி கொடுக்கப்பட்டுள்ளது.பார்ட்டியில் சற்று மட்டையான நடிகர் ஜெய், நிஜ ஹீரோமாதிரி வண்டி ஒட்டி வந்துள்ளார்.ஆனால், சற்று தடுமாறி அடையாறு தடுப்பு சுவரில் மோதியதால், அவருடைய காரும் சற்று சேதம்  அடைந்துள்ளது. இதனை தொடர்ந்து குடி போதையில் கார் ஓட்டியது, பொது இடத்தில் சேதம் ஏற்படுத்தியது உள்ளிட்ட காரணங்களால் அவர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது

இரண்டு பிரிவுகளின் மீது நடிகர் ஜெய் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.மேலும் இன்று அதிகாலை நடந்த விபத்திற்குபின், அவர்கள்  இருவரும்  காருக்குள்ளேயே மட்டையாகி உள்ளனர்.நெடுநேரம்  ஆகியும்  வெளிவராததால், சோதனை  செய்த  போலீசார், அவர்கள் இருவரையும்  வெளியில்  இழுத்து வந்து போலிஸ் காரிலேயே  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்

Comments

comments