மணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை’ திரைப்படம் படுதோல்வி அடைந்தாலும் அதில் இருந்து மீண்டு தனது அடுத்த பணியை தொடங்கிய மணிரத்னம் தற்போது அதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

1505495984-5199
இந்த படத்தில் நாம் ஏற்கனவே கூறியபடி நான்கு ஹீரோக்கள் நடிக்கவுள்ளனர். அவர்கள் சிம்பு, விஜய்சேதுபதி, அரவிந்தசாமி மற்றும் பகத் பாசில். அதேபோல் ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நாயகிகளாக நடிக்கவுள்ளனர். மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது.
சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படம் இந்நிறுவனம் தயாரிக்கும் 17வது படம் ஆகும். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 2018ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கவுள்ளது.

Comments

comments