BTLslWCYg23YFZkepepsi_uma001

1990-களில் செல்போன் பல பேரிடம் இல்லாத காலத்திலேயே ஒரு Caller Tv show பிரமாண்ட ஹிட் ஆனது.

அந்த நிகழ்ச்சியின் மூலம் ஒரு தொகுப்பாளார பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கவர்ந்து இன்றுவரைக்கும் புகழ்ந்து பேசக்கூடிய பெண்தான் பெப்சி உமா.

சென்னையில் பிறந்த பெப்சி உமா MBA படிப்பு முடித்திருக்கிறார். இவர் பிரபல ரிவியில் “வாருங்கள் வாழ்த்தலாம்” என்ற நிகழ்ச்சி மூலமாக மீடியாவுக்குள் நுழைந்துவிட்டார்.

இவங்க அழகான குரலும் தனித்துவமான பேச்சும், தான் பிரபல ரிவியில் “பெப்சி உங்கள் சாய்ஸ்” என்ற நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக வாய்ப்பு தேடி வந்ததுக்கு காரணம்.

இந்நிகழ்ச்சிக்கு அவருக்கு சில கண்டிஷன் விதிக்கப்பட்டது. அதாவது கால் மேல் கால் போட்டு உட்காரு என் கண்டிசன் விதித்தனர்.

ஆனால் பெப்சி உமா அதற்கு மறுத்து விட்டார். என்னோட ஸ்டைலில் இயல்பாகவே நான் நிகழ்ச்சி பண்றேன் என சொல்லிவிட்டார்.

இவங்களுக்கு ரசிகர்கள் அதிகமான பிறகு கேரளாவில் உமா ரசிகர்கள் ஒரு கோவிலையே கட்டிருக்காங்க.

நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் தானாக வந்து உமாவை சந்தித்து சகஜமாக குடும்பத்துடன் மதிய உணவை கழித்திருக்கிறார்.

இளைஞர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகள் மத்தியிலும் உமா மிகவும் கவரப்பட்டார். மூளை வளர்ச்சி இல்லாத சிறுவன் ஒருவன் உமாவின் தீவிர ரசிகனாகவும் இருந்துள்ளான்.

வாயில் இருந்த்து வரும் வார்த்தை உமா மட்டும் தான் என் அச்சிறுவனின் தாய் உமாவிடம் போனில் தெரிவித்தார். இதை கேட்டு நெகிழ்ந்து போன உமா அச்சிறுவனின் வீட்டிற்கு சென்று சந்தித்துள்ளார்.

உமாவை கண்டதும் அவன் சிரிப்புடன் கைகளை தட்டியுள்ளான். ஒரு பேனாவை எடுத்து ஒரு சார்ட்டில் Uma என்றும் எழுதியுள்ளான்.

Comments

comments